பாபநாசம் இன்ச் கணக்கில் வித்தியாசம் பார்த்த எழுத்தாளர்கள்

Bookmark and Share

பாபநாசம்  இன்ச் கணக்கில் வித்தியாசம் பார்த்த எழுத்தாளர்கள்

கமல்ஹாசன், கௌதமி நடித்து இந்த வாரம் வெளிவர உள்ள படம்  பாபநாசம். மலையாளத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தமிழில் மலையாளப் படத்தை இயக்கிய ஜீது ஜோசப் இயக்கியுள்ளார்.

தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வேறு இயக்குனர்கள்தான் இயக்கினார்கள். இதுவே  பாபநாசம் படத்திற்கான ஒரு முக்கியமான விஷயமாக உள்ளது. மலையாள ஒரிஜனல் படத்தை இயக்கியவரே இயக்குவதால் அந்த ரசனை தமிழிலும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இயக்குனர் ஜீது ஜோசப் மலையாளி என்பதால் அவரால் பாபநாசம் படத்திற்கு வசனம் எழுத முடியாது. எனவே இந்தப் படத்திற்கு குமரி மாவட்டத்தைச் எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். திருநெல்வேலி வட்டார வழக்கில் அவர் எழுதியுள்ள வசனத்தை நட்சத்திரங்களுக்கு பயிற்றுவிப்பதற்காக மற்றொரு எழுத்தாளரான சுகா நியமிக்கப்பட்டுள்ளார்.

படப்பிடிப்புக்கு முன்பாக பாபநாசம் பகுதிக்குள் நுழையும் போதே கமல்ஹாசனுக்கே அந்த திருநெல்வேலி வழக்கை சரியாகப் பேசி விடுவோமா என்ற பயம் வந்ததாம். போதாததற்கு ஜெயமோகனும், சுகாவும் அந்த பேச்சு வழக்கு குமரி மாவட்டத்தில்தான் இருக்கும், திருநெல்வேலியில் இருக்காது.

30 கிலோ மீட்டருக்கு அப்பால்தான் அப்படிப் பேசுவார்கள் என்று வாக்குவாதம் நடக்குமாம். அது வேறு தன்னை பயமுறுத்தியதாகக் கமல்ஹாசன் கூறியுள்ளார். அந்த அளவிற்கு இன்ச் கணக்கில் கூட திருநெல்வேலி வழக்கைப் பயன்படுத்துவதில் இரண்டு எழுத்தாளர்களும் மிகவும் கவனமாக இருந்தனர் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர்களைப் பாராட்டிப் பேசியுள்ளார் கமல்ஹாசன்.


Post your comment





Related News
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்
ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது!
பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...!
விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!
திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்
நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்
தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா?
வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு!
ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions