விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!

Bookmark and Share

விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...!

கமல்ஹாசன் நடித்து வெளிவந்துள்ள பாபநாசம் படத்தின் வசூல் நன்றாக உள்ளதென்றும், படம் கமர்ஷியலாக வெற்றி பெறும் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், கமல்ஹாசன் நடித்து இதற்கு முந்தைய வசூல் படமாக அமைந்த  விஸ்வரூபம் படத்தின் வசூலை பாபநாசம் படம் நெருங்கவில்லை என்றே சொல்கிறார்கள்.

விஸ்வரூபம் படத்தின் முதல் வார இறுதி தமிழ்நாடு வசூல் சுமார் 31 கோடி ரூபாய் இருந்துள்ளது. ஆனால், பாபநாசம் படத்தின் முதல் வார இறுதி வசூல் சுமார் 20 கோடி ரூபாய் அளவில் மட்டுமே இருந்துள்ளது.

அதே போல் விஸ்வரூபம் படத்தின் முதல் வார இறுதி வெளிநாட்டு வசூல் 4.5 கோடியாக இருந்துள்ளது. ஆனால், பாபநாசம் படத்தின் முதல் வார இறுதி வெளிநாட்டு வசூல் 2.2 கோடியாக மட்டுமே இருந்துள்ளது.

பாபநாசம் படம் வெளிநாடுகளில் தமிழில் மட்டுமே வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை வேறு எந்த மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடவில்லை. ஏனென்றால், இதற்கு முன்னதாகவே இந்தப் படத்தின் கன்னடம், தெலுங்கு மொழி நேரடிப் படங்கள் அங்கெல்லாம் வெளியாகிவிட்டன. அதனாலும் பாபநாசம் படத்திற்கான வசூல் மிதமாகவே இருக்கிறது என்கிறார்கள். மேலும் இந்தப் படம் எந்தப் பரபரப்பும் இல்லாமல் வெளியானது.

ஆனால், விஸ்வரூபம் படம் திட்டமிட்டபடி வெளியாகாமல் சுமார் இரண்டு வாரங்கள் கழித்தே தமிழ்நாட்டில் வெளிவந்தது. படத்தை வெளியிட தமிழக அரசு அனுமதி மறத்ததே அதற்குக் காரணம். அதுவே படத்திற்கு மிகப் பெரும் விளம்பரமாக அமைந்து படம் நல்ல வசூலைப் பெற காரணமாக அமைந்துவிட்டது.

பாபநாசம் படம் அப்படி எந்தவிதமான சர்ச்சைகளும் சிக்காமல் வெளியானதே படத்திற்கு விளம்பரமாக அமையாமல் போய்விட்டது. மற்ற தென்னிந்திய மொழிகளில் படம் வெளியானதும், மிகப் பெரும் விளம்பரம் இல்லாததும் படத்தின் வசூல் குறைவிற்குக் காரணம் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions