39 தினங்களில் முடிந்த கமலின் பாபநாசம்

Bookmark and Share

39 தினங்களில் முடிந்த கமலின் பாபநாசம்

த்ரிஷ்யம் படத்தின் தமிழ் ரீமேக்கான பாபநாசத்தின் மொத்த படப்பிடிப்பும் 39 தினங்களில் முடிந்துள்ளது. வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் படத்திற்குப் பிறகு இவ்வளவு விரைவாக முடிந்த கமல் படம் இதுதான் என்கிறார்கள்.

 பாபநாசத்தின் பெரும்பாலான காட்சிகள் திருநேல்வேலி, பாபநாசம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டது. கமலின் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகள் தொடுபுழாவில் படமாக்கப்பட்டன.

கடைசிகட்ட படப்பிடிப்பும் தற்போது முடிந்துவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. நவம்பர் முதல் வாரத்தின் படத்தின் டப்பிங் வேலைகள் தொடங்குகின்றன. கமலின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்கள் தயாராக உள்ளன. பாபநாசமும் விரைவில் ரிலீஸுக்கு தயாராகிவிடும்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions