வசூல் மழையில் பாபநாசம்

Bookmark and Share

வசூல் மழையில் பாபநாசம்

விஸ்வருபம் படத்துக்குப் பிறகு ஏறக்குறைய 2 வருட இடைவெளிக்குப் பிறகு கமலின் நடிப்பில் வெளிவந்த படம் உத்தம வில்லன். எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படம் ஓடவில்லை. உத்தமவில்லன் தோல்வி காரணமாக த்ரிஷ்யம் ரீமேக்கான பாபநாசம் படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ஓப்பனிங் இல்லாமல்போனது.

கமல் படங்களுக்கே உரிய வழக்கமான எதிர்பார்ப்பும், ஓபனிங்கும் இல்லை என்றாலும், படத்தின் முதல் காட்சிக்குப் பிறகு இந்த நிலைமை மாறிப்போனது. படம் பார்த்தவர்கள் இப்படத்தைப் பற்றி ஆஹா ஓஹோ வென புகழ்ந்து தள்ள மவுத்டாக் அடுத்தடுத்த காட்சிகளுக்கு கூட்டம் வரத் தொடங்கியது.  

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை 'பாநாசம்' படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளும் ஹவுஸ்ஃபுல்.  குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இப்படம் இருப்பதால் ஏ சென்டர் மட்டுமின்றி, பி மற்றும் சி சென்டர்களிலும், வெளிநாடுகளிலும்கூட நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாக தகவல் அடிபடுகிறது.  

கடந்த 3 நாட்களில் பாபநாசம் படம் உலக அளவில் 23 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது.  சென்னையில் மட்டும் ஒன்றரை கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள பாபநாசம், தமிழகத்தில் மட்டும் 15 கோடிகளை வசூல் செய்திருக்கிறதாம்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions