இன்று பாபநாசம் ட்ரைலர் வெளியீடு

Bookmark and Share

இன்று பாபநாசம் ட்ரைலர் வெளியீடு

கமல் ஹாஸன் நடித்துள்ள பாபநாசம் படத்தின் ட்ரைலர் இன்று மாலை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தம வில்லன் திரைப்படத்துக்குப் பிறகு கமல் நடித்திருக்கும் படம் பாபநாசம்.

மலையாளத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்ற படம் ‘த்ரிஷ்யம்'. இந்தப் படத்தை இயக்கிய அதே இயக்குநர், அதை தமிழில் ரீமேக் செய்துள்ளார். இதில் கமல்ஹாசனுடன் கௌதமி, சார்லி , கலாபவன் மணி, அருள்தாஸ் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜிப்ரான் இசைமைத்திருக்கிறார். பாபநாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது. அதன் முதல் கட்டமாக படத்தின் டிரைலரை இன்று மாலை வெளியிடவிருப்பதாக ஆடியோ உரிமையை கைப்பற்றியிருக்கும் ‘திங்க் மியூசிக்' நிறுவனம் அறிவித்துள்ளது.

நாளை கமல் ஹாஸன் நடித்துள்ள உத்தம வில்லன் திரைப்படம் திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions