யூடியூபில் நூற்றுக்கணக்கான இலவச திரைப்படங்களை வழங்கும் பாரமவுண்ட் நிறுவனம்

Bookmark and Share

 யூடியூபில் நூற்றுக்கணக்கான இலவச திரைப்படங்களை வழங்கும் பாரமவுண்ட் நிறுவனம்

‘பிக் சிக்ஸ்’ எனப்படும் ஆறு முக்கியமான தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றான ஹாலிவுட்டின் தலைசிறந்த தயாரிப்பு நிறுவனமான ‘பாரமவுண்ட் ஸ்டூடியோஸ்’-ம் ஒன்று.

இது, பல்வேறு வித்தியாசமான சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைத் தயாரித்து வருகின்றது.  இந்நிலையில், தற்போது ‘பாரமவுண்ட் வால்ட் சேனல்’ என்கிற யூடியூப் சேனல் ஒன்றைத் தொடங்கியுள்ளது.

இந்நிறுவனம் தாமே தயாரித்த பல்வேறு வகையான கதையம்சங்களைக் கொண்ட நூறுக்கும் மேலான படங்களை இதன்மூலம் இலவசமாக வழங்கி வருகிறது. எனினும், தற்போது அமெரிக்க ரசிகர்களுக்கு மட்டுமே இது காணக்கிடைக்கின்றது.

விரைவில்,  இந்தச் சேனல் உலக சினிமா ரசிகர்கள் அனைவருக்கும், கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions