பாகுபலி படத்தை விமர்சித்து, சர்ச்சையில் சிக்கிய கபாலி இயக்குனர்?

Bookmark and Share

பாகுபலி படத்தை விமர்சித்து, சர்ச்சையில் சிக்கிய கபாலி இயக்குனர்?

சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த கபாலி படத்தை இயக்கியவர் பா.ரஞ்சித். அதை தொடர்ந்து மேலும் ஒரு ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதற்கான முதற்கட்ட பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் அவர்.

இந்நிலையில் பாக்ஸ்ஆபிஸில் கலக்கிவரும் பாகுபலி படம் மக்களுக்கு எந்த கருத்தும் கூறவில்லை என்று விமர்சித்ததாக தகவல் பரவியது.

அதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் ரஞ்சித்தை கடுமையாக திட்டினர். சிலர் கபாலி படம் பிளாப் என கூற, பலரும் கபாலி படம் ரஜினியால் தான் ஓடியது, அதற்கு ரஞ்சித் காரணமில்லை என சமூக வலைத்தளங்களில் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சர்ச்சை பற்றி விளக்கமளித்துள்ள ரஞ்சித், "நான் பாகுபலி பற்றி அப்படி ஒரு கருத்தை சொல்லவே இல்லை" என கூறியுள்ளார்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions