தமிழ் நாட்டில் கவுரவ கொலைகள்: திடுக்கிடும் உண்மைகளுடன் தயாராகும் பரஞ்சோதி

Bookmark and Share

தமிழ் நாட்டில் கவுரவ கொலைகள்: திடுக்கிடும் உண்மைகளுடன் தயாராகும் பரஞ்சோதி

ஐ.பி.எல் என்ற புதிய நிறுவனம் பரஞ்சோதி என்ற படத்தை தயாரிக்கிறது. இதனை மறுமலர்ச்சி பாரதியின் உதவியாளர் கோபு பாலாஜி இயக்கியுள்ளார். சபேஷ், முரளி இசை அமைத்துள்ளனர். சாரதி என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

ஹன்சிபா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர கஞ்சா கருப்பு, கீதா, மயில்சாமி சிங்கமுத்து நடிக்கிறார்கள். இந்தப் படம் தமிழ்நாட்டில் நடக்கும் கவுரவ கொலைகள் பற்றிய படம் என்கிறார் இயக்குனர் கோபு பாலாஜி. 

அவர் மேலும் கூறியதாவது: 

தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பல ஆண்டுகளாகவே கவுரவ கொலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு பின்னால் ஜாதி ஆதிக்கம் இருக்கிறது. வேறு வேறு காரணங்களுக்காக செய்யப்படும் கொலைகள் கூட கவுரவ கொலைகளாக சித்தரிக்கப்படுகிறது.

இந்த உண்மைகளை எந்த தயக்கமும் இல்லாமல் சொல்கிற படம். சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டுகளில் நடந்த ஒரு கவுரவகொலையை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீசுக்கு பிறகு பரபரப்பாக பேசப்படும் என்கிறார் கோபுபாலாஜி.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions