பட்டிதொட்டியெல்லாம் மெஹா ஹிட்டான 'பரஞ்சோதி' திரைப்பட பாடல்கள்

Bookmark and Share

பட்டிதொட்டியெல்லாம் மெஹா ஹிட்டான 'பரஞ்சோதி' திரைப்பட பாடல்கள்

ஐ.பி.எல் சினிமாஸ் நிறுவனம் சார்பில் என்.லட்சுமணன் தயாரிக்கும் திரைப்படம் 'பரஞ்சோதி'. கிராமத்து காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள  இப்படத்தின் கதை 1990களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.

காதல், உறவுகளை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதையும், உறவுகள், காதலையும், காதலர்களையும் எப்படியெல்லாம் சிதைக்கிறார்கள் என்பதையும், மையமாக வைத்து அழகியலோடு கூடிய திரைக்கதையோடு எதார்த்த தன்மையை மீறாத கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சாரதி, நாயகனாக அறிமுகமாகியுள்ளார். நாயகியாக 'திரிஷ்யம்' புகழ் அன்சிபா நடிக்கிறார்.

கஞ்சா கருப்பு முக்கிய வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தில், விஜயகுமார், கீதா, மயில்சாமி, சிங்கமுத்து, முத்துக்காளை, ஷகிலா, சங்கர் குரு ராஜா, மீரா கிருஷ்ணன், போஸ் வெங்கட், பாலாசிங், சண்முகசுந்தரம் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

சபேஷ்-முரளி இசையமைக்கும் இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியுள்ளார். எஸ்.சந்திரசேகரன் ஒளிப்பதிவு செய்யும்  இப்படத்திற்கு சுதாகர் படத்தொகுப்பு செய்துள்ளார். வினோத் கலையை நிர்மாணிக்கிறார். என்.கோபாலகிருஷ்ணன், என்.தமிழ் செல்வன், என்.மணிகண்டன் ஆகியோர் இணை தயாரிப்பு பணியை மேற்கொள்ள, ஐ.பி.எல் சினிமாஸ் நிறுவனம் சார்பில் என்.லட்சுமணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோபு பாலாஜி இயக்குகிறார். 'பரஞ்சோதி' படத்தின் பாடல்கள் மெகா ஹிட் பாடல்களாக அனைவரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நா.முத்துக்குமாரின் வரிகளில், சபேஷ்-முரளியின் இசையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள 5 பாடல்களும், ஒவ்வொன்றும் ஒரு ரகமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. தற்போது, இளசுகளின் ரிங்டோனாகவும், தமிழகத்தின் பட்டிதொட்டியெல்லாம் கேட்கும் பாடலாகவும் வலம் வருகிறது.

படத்தின் முதல் பாடலான "மானே பொன்மானே..." எனத் தொடங்கும் பாடலை பின்னணி பாடகர் வேல்முருகனும், அனிதாவும் இணைந்து பாடியுள்ளனர்.  இந்த பாடல் கோவில் திருவிழாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் சாரதி, கஞ்சா கருப்பு, தேஜாஸ்ரீ, ஷகிலா ஆகியோருடன்  பாரம்பரிய நடனக் கலைஞர்களான மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற பெரிய நடன குரூப்பை வைத்து மிக பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில், சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி கிராமத்தில், பொது மக்களின் பரிபூரண ஒத்துழைப்புடன் படம்பிடித்துள்ளனர்.

இரண்டாவதாக, "வெண்ணிலவே..." என தொடங்கும் மனதை வருடம் மெலோடி பாடலை பாடகர் ஹரிசரண் பாடியுள்ளார். இந்த பாடலை சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றிலும், மூங்கில் காடுகளிலும் சாரதி, அன்சிபா இருவரையும் வைத்து மிக சிரமப்பட்டு இரவு நேரங்களில் படம் பிடித்துள்ளனர். இந்த பாடலுக்கு ராதிகா நடனம்  அமைத்துள்ளார்.

மூன்றாவது பாடலாக வரும் "இந்த பறவைகள் போவது எங்கே..." என தொடங்கும் பாடலை பின்னணி பாடகர் கிருஷ்ணராஜ்  பாடியுள்ளார்.  'மான்டேஜஸ்' ஆக படம்பிடிக்கப்பட்டுள்ள இந்த பாடல் வரிகளும், படமாக்கப்பட்ட விதமும் அனைவரையும் சிந்திக்க தூண்டும் விதத்தில் அமைந்துள்ளது.

நான்காவதாக வரும் "இடி மின்னலோடு...." என தொடங்கும் பாடலை பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் மற்றும் சத்யபிரகாஷ் இருவரும் இணைந்து பாடியுள்ளனர். இதில் நாயகன் சாரதி, நாயகி அன்சிபா இருவரும் கொட்டும் மழையில் நனைந்தபடி நடித்துள்ளனர். இருவரும் காட்டிய நெருக்கத்தில் படக்குழுவினர் அசந்து போனார்களாம்.

ஐந்தாவது பாடலாக வரும், "அம்மா அம்மம்மா..." என்ற அம்மா சென்டிமெண்ட் பாடல், நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் இடம்பெற்றுள்ள அம்மா செண்டிமெண்ட் பாடலாக ஹிட்டாகியுள்ளது. இப்பாடலை விஜய் யேசுதாஸ் மனம் உருகி, கண் கலங்கி பாடியுள்ளார். இதில் அம்மாவாக கீதா நடித்துள்ளார். இந்த பாடலில் தாய்மையின் மரணத்தை மான்டேஜஸ் பாடலாக படம்பிடித்துள்ளனர். இந்த பாடலை பார்ப்போரும், கேட்போரும் மனம் உருகுவது நிச்சயம்.

காதல், அம்மா செண்டிமெண்ட், மெலோடி, ஆட்டம் போட வைக்கும் குத்து பாடல், என அனைத்து ரகங்களிலும் ஒவ்வொரு பாடல் என்ற விதத்தில், 'பரஞ்சோதி' படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

'பரஞ்சோதி' படத்தின் பாடல்கள் மெகா ஹிட்டாகியிருப்பதை தொடர்ந்து படத்தையும் விரைவில் வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions