பரவை முனியம்மாவுக்கு ஜெயலலிதா உதவி

Bookmark and Share

பரவை முனியம்மாவுக்கு ஜெயலலிதா உதவி

அ.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:–

பிரபல நாட்டுப்புறப் பாடகியும், திரைப்பட நடிகையுமான பரவை முனியம்மா தனது குடும்பத்தின் ஏழ்மை காரணமாகவும், தன் முதுமை காரணமாகவும் தனக்கு ஏற்பட்டுள்ள வறுமைச் சூழலை விவரித்து, தன்னை இத்தகைய சூழலில் இருந்து காப்பாற்றி, தனக்கும், தனது குடும்பத்திற்கும் மறு வாழ்வு தருகின்ற வள்ளலாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா மட்டும் தான் இருக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து பேட்டி அளித்திருந்தார்.

பரவை முனியம்மாவின் ஏழ்மை நிலையையும், இயலாமையையும் உடனடியாகக் கண்ணுற்ற, அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்– அமைச்சர் ஜெயலலிதா பரவை முனியம்மாவுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்ப செலவுகளுக்கென்று மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் ‘‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை’’யில் இருந்து வழங்க ஆணையிட்டுள்ளார்.

மேலும், மதுரை, தனியார் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் பரவை முனியம்மாவின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதியுதவியை ‘‘புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அறக்கட்டளை’’யே ஏற்கும் என்றும் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
மோசமான நிலையில் பழம்பெரும் நடிகை பறவை முனியம்மா - அதிர்ச்சி தகவல்
இன்றைய படங்கள்... வன்மம், நாய்கள் ஜாக்கிரதை, காடு, விழிமூடி யோசித்தால்
பரவை முனியம்மாவுடன் ஆடிப்பாடாடிய சிவகார்த்திகேயன்..!
பிரபல பின்னணிப் பாடகர் இயக்கத்தில் உருவாகும் பறவை..!
அஜீத் படத் தலைப்பு பறவை - பறக்குமா? நிலைக்குமா?
வரிவிலக்கு தந்து என்னை ஊக்கப்படுத்துங்கள் அம்மா? “நீர்ப்பறவை” இயக்குனர்!
மனைவி முன் ஹீரோயினுக்கு 'லிப் கிஸ்' அடிக்க அவஸ்தை பட்ட ஹீரோ!
‘நீர்ப்பறவை’யில் வைரமுத்துவின் சர்ச்சைக்குரிய‌ பாடல் வரிகள் நீக்கம்!
இலங்கையில் இருந்து வந்தவர்களை விருந்தாளியக கருதுங்கள் - கவிஞர் வைரமுத்து!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions