மழை வெள்ள பாதிப்பு குறித்து பார்த்திபனின் பீப் பாடல்!

Bookmark and Share

மழை வெள்ள பாதிப்பு குறித்து பார்த்திபனின் பீப் பாடல்!

சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட போது நடிகர் பார்த்திபன் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

தற்போது சென்னை மக்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர் பார்த்திபன் வெள்ளப் பாதிப்பு பற்றி ‘த்துதா மித வகுதா’ என்ற ‘பீப்’ பாடலை எழுதி யூடியூப்பில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக நடிகர் பார்த்திபன் கூறியதாவது:–

ஒரு சராசரி மனிதனாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன். ஒரு வீட்டில் துக்க நிகழ்ச்சி நடந்தால் அந்த துக்கத்தை மறக்க சில நாட்களில் ஏதாவது நல்ல காரியத்தை நடத்துவார்கள்.

அதே போல் சென்னையும் மீண்டும் பழைய நிலைமைக்கு வர வேண்டும் என்று ஒரு பாடல் உருவாக்க நினைத்தேன். அந்த பாடலை நான் எழுத சத்யா இசையமைத்தார். தற்போது ‘‘பீப்’’ பாடல் தமிழகத்தில் பரபரப்பாக இருப்பதால் இப்பாடலை ’’பீபீ’’ என்று தொடங்குவது போல எழுதினேன்.

இந்த பாடலில் வெள்ள பாதிப்பின்போது பொது மக்களுக்கு உதவிய தன்னார்வலர்களை ஆட வைத்தேன். இதில் சமுத்திரக்கனி, மயில்சாமி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். துயரப் பருப்பு, கவலைப் பருப்பு என பருப்பில் புதிய வகைகளை அறிமுகப்படுத்தி இருக்கிறேன்.

மக்களிடையே இருக்கும் மனித நேயத்தை வெளியே கொண்டு வர வேண்டும் என்பதுதான் இந்த பாடலின் நோக்கம்.

மீ அன்ட் யூடியூப் என்ற பெயரில் ஒரு யூடியூப் சேவை தொடங்கி அதில் இந்த பாடலை பதிவேற்றம் செய்துள்ளேன். இது போன்ற பல நல்ல விஷயங்களை அந்த சேனலில் பதிவேற்றம் செய்ய உள்ளேன்.


Post your comment





Related News
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions