'ஷமிதாப்' பற்றி நெகிழும் பார்த்திபன்

Bookmark and Share

'ஷமிதாப்' பற்றி நெகிழும் பார்த்திபன்

'ஷமிதாப்' படம் விமர்சன ரீதியாக பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அமிதாப்பும், ஷமிதாப்பும், அக்ஷராவும் போட்டி போட்டு நடித்துள்ளார்கள் என்பதுதான் பலரது விமர்சனங்களில் இருக்கும் பொதுவான ஒரு விஷயமாக உள்ளது.

நடிப்பில் மிகப் பெரும் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் ஒரே சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், அவருடன் போட்டியாக நடிக்க வேறு எந்த ஹிந்தி நடிகரையும் தேர்ந்தெடுக்காமல் தனுஷ்தான் வேண்டும் என்று சொன்னதாக  இயக்குனர் பால்கி ஏற்கெனவே தெரிவித்திருந்தார். தனுஷுக்கு இது ஹிந்தியில் இரண்டாவது படம்தான். அதோடு படத்தில் நாயகியாக அக்ஷராவை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

இப்படி ஒரு இளமை நடிப்புக் கூட்டணியுடன் அமிதாப் இணைந்தது பாலிவுட் காரர்களை ஆச்சரியப்படுத்தியது. தனுஷ் நடிக்கிறார் என்பதால் இங்குள்ள திரையுலகப் பிரபலங்களும் படத்தைப் பாராட்டித் தள்ளி வருகிறார்கள்.

அதில் பார்த்திபனின் பாராட்டு, கவனிக்கத்தக்கதாக உள்ளது. “ஷமிதாப் பார்த்தேன். முதலில் இயக்குனர் பால்கியின் பாதம் தொட்டு வணங்குகிறேன். எங்களின் ஆன்ம இசை இளையராஜாவை தொடர்ந்து பயன்படுத்தி கொள்வதற்கு.

நான் அமிதாப்பின் மகா விசிறி-மெகா காதலன்-என் நடிப்பின் ஆதாரம்-இந்தியாவிற்குள் ஒரு உலக நடிகன்-எனக்கு எவ்வளவு வயதானாலும் அவர் போல வேடங்கள் நடிக்கவேண்டும் என்று.  அவருக்கு நிகராய் எவரும் நிற்க கூட முடியாது.  

நிற்க, நம் தனுஷ் நிற்கிறார், அவர் உயரம் தொடுகிறார் , இன்னும் உச்சம் தொடுவார்.  தனுஷின் அம்மாவாய் நான் பெருமிதமாய் பேரானந்தமாய் கண் கலங்கினேன்.  பி சி = பிரமாதம் சிறப்பு !,  அக்க்ஷரா நடித்திருப்பதையே மறந்துவிட்டேன்.

அந்த படத்தில் ஒரு உதவி இயக்குனர் ஷமிதாப் உயர உதவி பின் இயக்குனர் ஆகி மிக இயல்பாய் ஒரு துறு துறு பெண் வந்து உள்ளம் கொள்ளை கொள்கிறாரே அவர் தான் அக்க்ஷராவோ?, ” என பார்த்திபன் தெரிவித்துள்ளார். 


Post your comment

Related News
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions