தாதா ஆவதற்காக கன்னட மொழி கற்கும் பார்த்திபன்..!

Bookmark and Share

தாதா ஆவதற்காக கன்னட மொழி கற்கும் பார்த்திபன்..!

தமிழ் சினிமா உலகை தாண்டியும் நடிகர் பார்த்திபனின் எல்லை மலையாள உலகையும் டச் பண்ணியது. ஏற்கனவே 'நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வக', 'மேல்விலாசம்', 'எஸ்கேப் ஃப்ரம் உகாண்டா' என மூன்று மலையாள படங்களில் நடித்துள்ள பார்த்திபன் அங்கே அவருக்கென குறிப்பிட்ட ரசிகர்களையும் வைத்துள்ளார்.

அதேபோல இப்போது முதன்முறையாக 'தாதா இஸ் பேக்' (Dada is Back) என்கிற படத்தின் மூலம் கன்னட திரையுலகிலும் அடியெடுத்து வைத்துள்ளார். 'கேம்பகோலா லவ்' என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய சந்தோஷ் இந்தப்படத்தை இயக்குகிறார்.

“கன்னட திரையுலகில் இருந்து கடந்த பத்து வருடங்களாக என்னை நடிக்க அழைத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அப்போதெல்லாம் ஒதுங்கிவிட்டு இப்போது நான் நடிக்க ஒத்துக்கொண்டிருப்பது என் சுயநலத்திற்காக.. ஆம் என்னுடைய தமிழ்ப்படங்களுக்கு கன்னட திரையுலகில் ஒரு மார்க்கெட்டை உருவாக்கவே அங்கே நுழைகிறேன்” என இந்தப்படத்தில் நடிக்க ஒத்துக்கொண்டபோது கூறினார் பார்த்திபன்.

தற்போது கிட்டத்தட்ட 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், இந்தப்படத்திற்காக, கன்னடத்தில் தனது சொந்தக்குரலிலேயே டப்பிங் பேசவும் போகிறார் பார்த்திபன்.

இதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிக்கும்போது கன்னட வசனங்களை ஆங்கிலத்தில் எழுதி பேசினாலும்  கூட, டப்பிங் பேசும்போது இன்னும் இயல்பாக இருக்கவேண்டும் என்பதால் கன்னட - ஆங்கில டிக்சனரி ஒன்றை வாங்கி கன்னட மொழியை மனதில் உருப்போட்டுக்கொண்டு இருக்கிறாராம் பார்த்திபன்.

ஆனால் மலையாளப்படங்களில் இவர் பெரும்பாலும் தமிழில் தான் வசனங்களை பேசி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 


Post your comment





Related News
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions