வேட்பாளர்கள் மீது திருப்தி இல்லையெனில் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்: நடிகர் பார்த்திபன் கருத்து

Bookmark and Share

வேட்பாளர்கள் மீது திருப்தி இல்லையெனில் நோட்டாவுக்கு வாக்களியுங்கள்: நடிகர் பார்த்திபன் கருத்து

நேற்று காலையில் தொடங்கிய சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவில் நடிகர், நடிகையர்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற காலையில் இருந்தே வாக்குப் பதிவு மையங்களில் தங்களது வாக்கை பதிவு செய்து செய்தனர். நடிகர் ரஜினியும், அஜித்தும் காலையிலேயே முதல் ஆளாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

அதைத் தொடர்ந்து, நடிகர் கமல்ஹாசன், விவேக், உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, அக்ஷராஹாசன், கவுதமி, சசிகுமார் உள்ளிட்டோர் வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்துவிட்டு சென்றுள்ளனர். நடிகர் பார்த்திபனும் தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு, தனது வாக்கை பதிவு செய்துவிட்டு பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்ற ஓட்டு போட வேண்டும். முதலில் நீங்கள் ஓட்டுப் போட செல்லும்போது, உங்கள் தொகுதியில் உள்ள வேட்பாளர் கட்சியில் எந்த அங்கீகாரத்தில் உள்ளார். அவர் உங்கள் குறைகளை தைரியமாக எடுத்துச் சொல்ல துணிந்தவரா? அவருக்கு ஓட்டுப் போட்டால் உங்களுக்கு நன்மை கிடைக்குமா? என்பதை ஆராய்ந்து ஓட்டுப் போடுங்கள்.

அந்த வேட்பாளர் மீது உங்களுக்கு திருப்தி இருந்தால் மட்டும் போடுங்கள். கட்சி சம்பந்தப்பட்டவர்கள் மீது உங்களுக்கு திருப்தி இல்லையென்றால் சுயேட்சையாக நிற்பவர்கள் உங்களது ஓட்டை பதிவு செய்யுங்கள். அப்படி யார் மீதும் திருப்தி இல்லாத பட்சத்தில் உங்கள் ஓட்டை வீணாக்கிவிடாதீர்கள். மாறாக நோட்டாவுக்கு போடுங்கள்.

இந்த தேர்தலில் நோட்டோ ஒரு முக்கிய இடம் பிடிக்கும். நிறைய இளைஞர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க ஆர்வமுடன் இருக்கிறார்கள் என்றார்.  


Post your comment





Related News
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions