என் சுய சரக்கை சம்மதித்ததற்கு நன்றி - பார்த்திபன்

Bookmark and Share

என் சுய சரக்கை சம்மதித்ததற்கு நன்றி - பார்த்திபன்

நக்கல்களின் நாயகன் என பார்த்திபனை தாராளமாகக் குறிப்பிடலாம். எங்கெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் அவருடைய பார்த்திபத்தனத்தை வெளிக்காட்டி விடுவார்.

நேற்று வெளிவந்துள்ள 'மாசு என்கிற மாசிலாமணி' படத்தில் அசிஸ்டென்ட் கமிஷனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்திபன். இடைவெளிக்குப் பிறகுதான் அவருடைய காட்சிகள் வருகிறதென்றாலும் அந்த சில காட்சிகளிலேயே அவருடைய நக்கலான வசனங்களால் ரசிகர்களின் கைதட்டலை அள்ளிவிடுகிறார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு கவிதை நடையிலான கடிதத்தை அவருடைய சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். அதிலும் கூட அவருடைய நக்கல், நையாண்டி அதிகம் வெளிப்பட்டுள்ளது, கூடவே ஒரு உள் அர்த்தமும் அதில் ஒளிந்திருக்கிறது.

புரிந்தவர்கள் புரிந்து கொள்ளுங்கள், புரியாதவர்கள் புரிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்...அவர் எழுதியுள்ளது இதோ... “நட்சத்திரங்களை விட, அதைக் கடந்து அண்டமாய் பார்க்கிறேன் திரை ரசிகர்களை, நான் யாரையும் அணுகாமல் என்னை அணுகி வரும் வாய்ப்புகளை சிரம் மேற்கொண்டு திறம்பட அது ரசனையோடு வெளிப்பட முயன்று உழைத்து பயன்படுத்திக் கொள்கிறேன், அப்படி ஒரு சந்தர்ப்பமே 'மாசு'.

ஒவ்வொரு காட்சியை விளக்கும் போதும் “நான் என்றுமே ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு உள்ளானவன், எனவே இன்னும் கொஞ்சம் தீனி போடுங்கள் அல்லது 'நான் வந்தும் ஒன்னும் புடுங்கலேன்னு ஒருத்தரும் சொல்லிடக்கூடாது'ன்னு ஒரு வரியாவது கோர்த்துச் சொல்லவா எனக் கேட்டு உதடுகளின் இடைவெளியில் விசிலாய் சேர்த்து விடுகிறேன்.

அதற்கான பலன், உலகெங்கிலும் எனக்கு வண்ணமயமாய் வந்து குவியும் பாராட்டுகள். அஜித், விஜய், சூர்யா அல்லது விஜய், அஜித், சூர்யா அல்லது சூர்யா, அஜித், விஜய் அல்ல நான், வந்து நின்று பேசினாலே விசில் அள்ள....என் திறமை பேசினாலே விசில் கிடைக்கும் என்பதை நன்கறிந்தவன் நான்.

வாய்ப்பு கடுகளவு கிடைத்தாலும் அதை 'என்'ணையில் இட்டு 'படபட'வென பாராட்டாய் தாளித்து விடுகிறேன். இப்படத்தில் நான் இருந்தேதீர வேண்டும் என தீர்மானித்தும் என் சுய சரக்கை அரங்கேற்ற சம்மதித்தும் ஒத்துழைத்த இயக்குனருக்கு நன்றி.

’மேல பார்த்தால் ஆன்டனா தான் தெரியும், அந்தோணியா தெரிவான்’ என நான் பேச அதற்கேற்ப நடித்து ஒத்துழைத்த இனிப்பின் சுவை சூர்யாவிற்கு நன்றி. மீண்டும் முதல் வரிகள்.

வாக்கியம் முடிக்கும் முன்பே உதட்டில் விரல் குவித்து விசில் அடிக்கும் அநியாய புத்திசாலி ரசிகர்களின் அடிமை நான்,” என பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

 


Post your comment

Related News
கேரள வெள்ள நிவாரணத்துக்கு பார்த்திபன் உதவி
பார்த்திபன் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்த விஜய் - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்தின் மகனை மணக்கிறார் பார்த்திபன் மகள் கீர்த்தனா- யார் தெரியுமா? புகைப்படம் இதோ
கன்னத்தில் முத்தமிட்டால் குழந்தை அமுதாவுக்கு திருமணம் - மாப்பிள்ளை யார் தெரியுமா?
தளபதி விஜய் வீட்டிற்குள் கீர்த்தி சுரேஷ் - வைரலாகும் புகைப்படம்.!
நடிகர்கள் பார்த்திபன், விஜய் சேதுபதி உள்ளிட்ட 11 பேருக்கு பெரியார் விருது - தி.க. தலைவர் வீரமணி அறிவிப்பு
‘‘மக்கள் வாக்குகளை ஏப்பமிடும் காக்கைகள்’’ - அரசியல்வாதிகள் மீது நடிகர் பார்த்திபன் தாக்கு
நீங்களும் ஹீரோ ஆகலாம் - பிரபல இயக்குனர் கொடுத்த அரிய வாய்ப்பு
பிரபல இயக்குனரை குரங்கு என்று மேடையில் கூறிய பார்த்திபன்
ரஜினி அரசியலுக்கு வரும் வரை பொறுமை காப்போம்: நடிகர் பார்த்திபன் பேட்டி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions