பார்த்திபன் படத்தில் ரமேஷ்அரவிந்த்?

Bookmark and Share

பார்த்திபன் படத்தில் ரமேஷ்அரவிந்த்?

பார்த்திபன் இயக்கி நாயகனாக நடித்த முதல் படம் புதிய பாதை. அந்த படம் சூப்பர் ஹிட்டானதால் அதன்பிறகு பொண்டாட்டி தேவை, தாலாட்டு பாடவா, தையல்காரன், சுகமான சுமைகள், உள்ளே வெளியே, புள்ளக்குட்டிக்காரன், ஹவுஸ்புல், வித்தகன் என பல படங்களை இயக்கி நடித்தார் பார்த்திபன்.

அதன்பிறகு மற்ற இயக்குனர்களின் படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், கதை திரைக்கதை இயக்கம் படத்தில் வெறும் இயக்குனராக மட்டுமே செயல்பட்டவர், அடுத்து கதை இருக்கு என்ற படத்தையும் முழுக்க முழுக்க மற்றவர்களைக்கொண்டே இயக்க தயாராகிக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இப்போது இயக்குனராக மட்டுமே செயல்படும் பார்த்திபன், தனது முதல் படமான புதிய பாதையிலும் தான் இயக்குனராக மட்டும்தான் செயல்பட இருந்தாராம். அந்த படத்தில் நடிப்பதற்காக தற்போது கமலின் உத்தமவில்லன் படத்தை இயக்கியுள்ள நடிகர் ரமேஷ்அரவிந்திடம்தான் கால்சீட் கேட்டிருந்தாராம்.

ஆனால், அப்போது மனதில் உறுதி வேண்டும், கேளடி கண்மணி என ரமேஷ்அரவிந்த் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த நேரம் என்பதால் அவர் கேட்ட சம்பளம், பார்த்திபன் போட்டு வைத்திருந்த பட்ஜெட்டை எகிறி சென்றதாம்.

அதன்காரணமாகத்தான் புதிய பாதையில் தானே ஹீரோவாகியிருக்கிறார் பார்த்திபன். உத்தமவில்லன் படத்தின் ஆடியோ விழாவை தொகுத்து வழங்கியபோது, ரமேஷ்அரவிந்த் முன்னிலையில் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார் பார்த்திபன்.


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
உள்ளிருப்பு போராட்டம் நடத்தும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கமல்ஹாசன் ஆதரவு
பாஸ்கர் ஒரு ராஸ்கல் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
பிக் பாஸ் சீசன்-2 நிகழ்ச்சியில் கமலுக்கு பதிலாக 2 மாபெரும் நடிகர்கள் -யார் தெரியுமா?
பிக் பாஸ் சீசன்-2 தொகுத்து வழங்க போவது யார்? - வெளிவந்த சூப்பர் தகவல்.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!
பிக் பாஸ்-2 தொகுத்து வழங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions