பார்த்திபன் தொகுத்து வழங்கும் 'உத்தம வில்லன்' விழா

Bookmark and Share

பார்த்திபன் தொகுத்து வழங்கும் 'உத்தம வில்லன்' விழா

கமல்ஹாசன் நடித்துள்ள 'உத்தம வில்லன்' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை, நந்தம்பாக்கம்,வர்த்தக மையத்தில், வரும் மார்ச் 1ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், நட்சத்திரங்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொள்ள பிரம்மாண்டமான விழாவாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் சில கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

இந்த விழாவை இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தொகுத்து வழங்க உள்ளார். மேடைப் பேச்சுகளிலும், எப்போதாவது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் தனக்கென ஒரு தனி பாணியை கையாளுவதில் சிறந்தவர் பார்த்திபன்.

அவர் அறிமுகமான காலத்திலிருந்த இன்று வரை அவர் கலந்து கொள்ளும் எந்த நிகழ்ச்சிகளாக இருந்தாலும் செய்திகளில் இடம் பெறும் வண்ணம் அவருடைய பேச்சு இருப்பது வழக்கம்.

கமல்ஹாசனே, பார்த்திபனை விரும்பி அழைத்து, 'உத்தம வில்லன்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்கக் கேட்டுக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. இது குறித்து பார்த்திபன், “மார்ச் முதல் நானும் உத்தம வில்லன்.

இசை வெளியீட்டிற்கு இசைந்துள்ளேன் தொகுத்து வழங்க ! நேற்று  இரண்டு மணி நேரம் கமலுடன் கலந்து பேசியது ஆனந்த அலையடிக்கிறது இன்னமும்...” என அது பற்றி பதிவு செய்துள்ளார்.


Post your comment





Related News
நயன்தாராவுக்கு வில்லனாக நடித்தது மிகப்பெரிய அந்தஸ்து: புதுமுக வில்லன் நடிகர்
அஜித் படத்துக்கு வில்லன் ரெடி
ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்
உத்தம வில்லனுக்கு சர்வதேச திரைப்பட விழாவில் ஐந்து விருதுகள்
உத்தமவில்லன் படம் ஆன்லைனில் வெளியீடு
ரசிகர்கள் பற்றி கவலை இல்லை
இந்த வாரம் சிறு படங்களின் வாரம்
3 மணி நேரம் ஓடும் உத்தமவில்லன்!
\'உத்தம வில்லன்\' முதல் நாள் ரிப்போர்ட்...
உத்தமவில்லன் படத்தில் 15 நிமிட காட்சிகள் குறைப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions