பயங்கர தாதாவாக நடித்த பார்த்திபன்

Bookmark and Share

பயங்கர தாதாவாக நடித்த பார்த்திபன்

வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருபவர் பார்த்திபன். இவரது நடிப்பில் சமீபத்தில் ‘மாஸ்’ படம் வெளியானது. இதில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் தாதாவாக ‘திகார்’ படத்தில் நடித்திருக்கிறார்.

திகார் படத்தை நீண்ட இடைவெளிக்குப்பின் பேரரசு இயக்கியுள்ளார். இப்படத்தில் நாயகனாக உன்னி முகுந்தன் நடித்திருக்கிறார். நாயகியாக அகன்ஷா பூரி நடித்திருக்கிறார். மேலும் பார்த்திபனுக்கு ஜோடியாக பிரியங்கா நடித்திருகிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், தேவன், ரியாஸ்கான், மனோஜ்.கே.ஜெயன், ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

இப்படம் நம்பர் ஒன் தாதாவின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார்கள். இதில் பார்த்திபன் படு பயங்கர தாதாவாக நடித்திருக்கிறார். இந்த கதாப்பாத்திரம் வலுவுள்ளதாக இருந்ததால் இப்படிப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்தேன் என்று பெருமையாக சொல்லியிருக்கிறார் பார்த்திபன்.

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, கேரளா, துபாய், போன்ற இடங்களில் அதிக பொருட் செலவில் உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு முன் வெளியான எந்த படத்திலும் இந்தளவு சண்டைக் காட்சிகள் இருந்ததில்லையாம். அந்த அளவுக்கு ஸ்டன்ட் காட்சிகள் இப்படத்திற்காக உருவாக்கியிருக்கிறார்களாம். இப்படம் இம்மாதம் 21-ம் தேதி திரைக்கு வருகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions