1500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் பார்த்திபன்!

Bookmark and Share

1500 குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் பார்த்திபன்!

மழையால் வாழ்க்கையை இழந்த சென்னை மக்களுக்கு சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி போன்றோர் தன்னிச்சையாக களத்தில் நின்று பணியாற்றி வருகிறார். இவ்வாறு உதவி வரும் நடிகர்களில் முக்கியமானவரான பார்த்திபன்தனது மனிதேய மன்றம் சார்பில் தொடர்ந்து மழை பெய்த நாளில் இருந்து உதவிக் கொண்டிருக்கிறார். 

இதன் ஒரு பகுதியாக நேற்று வடபழனியில் தனது மனிதநேய மன்றம் சார்பில் மனக்கழிம்பு என்ற பெயரில் 1500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அதோடு மருத்துவ முகாம்களையும், ரத்ததான முகாமையும் நடத்தினார். 

தனது மகள், மகனோடு முதலில் தானே ரத்தம் கொடுத்தார். பின் நடிகர்கள் ஆர்யா, மயில்சாமி, நடிகைகள் ரோகினி, சுஹாசினி, இயக்குனர்கள் கே.எஸ்.ரவிகுமார், பத்ரி, ஆர்.ஜே.பாலாஜி உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். 

மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட 150 பேரை காப்பாற்றிய பெல்ஜியத்தைச் சேர்ந்த பீட்டர்வேன் நிகழ்ச்சியில் கவுரவிக்கப்பட்டார். 

இதுகுறித்து பார்த்திபன் கூறும்போது "கடந்த 15 நாட்களாக நிவாரண பணிகள் செய்து வருகிறேன். ஒரு மனிதன் சக மனிதனுக்கு உதவி செய்வதுதான் வாழ்வின் உயர்ந்த பணி. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இப்போது உதவியுடன் மனக்கழிம்பும் தேவை.

அதனால் எனது பணிகளுக்கு மனக்கழிம்பு என்று பெயர் வைத்திருக்கிறேன். எனது பணிகள் எனது மனிநேய மன்றனத்தின் மூலம் தொடர்ந்து நடக்கும்" என்றார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions