வெற்றிப் பெற்ற அணியுடன் எதிரணியும் கைகோர்த்து கொள்ளவேண்டும்- பார்த்திபன்

Bookmark and Share

வெற்றிப் பெற்ற அணியுடன் எதிரணியும் கைகோர்த்து கொள்ளவேண்டும்- பார்த்திபன்

தென்னிந்திய நடிகர் சங் தேர்தலில் ஓட்டுப் போட்டபின் பத்திரிகையாளர்களை சந்தித்த பார்த்திபன் கூறும்போது, “நடிகர் சங்க தேர்தல் முடிந்த பிறகு இரண்டு அணியினரும் ஒன்று சேரவேண்டும்.

இரு அணிகளுக்கும் இடையே பல்வேறு பிரச்சினைகள் இருந்தால் தேர்தல் முடிவுக்கு பிறகு ஒற்றுமையுடன் செயல்படவேண்டும். இரு அணிகளும் ஒற்றுமையுடன் இருக்க தூதுவராக இருக்க நான் தயார். 

மேலும் அவர் கருப்புச் சட்டையில் வந்தா. நடிகர் சங்கத் தேர்தல் மேல் உள்ள அதிர்ப்தியில் இந்த நாள் துக்க நாள் என்று கூறினார்.

மேலும் அவர், “ நடிகர் சங்கத் தேர்தல் இவ்வளவு பரபரப்புடன், உலகளவில் தெரியவேண்டியதற்கான அவசியமே இல்லை. வெறும் 3200 ஓட்டுக்களுடன் நடைபெறும் இந்தத் தேர்தலுக்கு ஏன் இந்த ஆர்ப்பாட்டம்.

இந்தத் தேர்தலுக்காக நடிகர்கள் மாறி மாறிப் பேசிக்கொண்டது எனக்கு கவலை அளிக்கிறது. அதனால் தான் கருப்புச் சட்டையில் வந்தேன். இந்த நாள் துக்க நாளாகத்தான் அனுசரிக்கிறேன்.

நடிகர் சங்கத்தேர்தலில் ஜெயித்து நல்லது செய்வதற்கு முன்னாடி, வெற்றிப் பெற்ற அணியுடன் எதிரணியும் கைகோர்த்து கொள்ளவேண்டும் என்பதே என் விருப்பம்” என்றார் பார்த்திபன்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions