புதிய பாதையில் பார்த்திபன்

Bookmark and Share

புதிய பாதையில் பார்த்திபன்

சென்னையில் நடந்த "மையம் படத்தின் இசை வெளீயிட்டு விழாவில் கலந்து கொண்ட பார்த்திபன், நான் கடந்த சில மாதங்களுக்கு முன் மரக்கானம் பகுதிக்கு குடிபெயர்ந்தேன். 

செடிகளும், அழகான மரங்களும், அதன் பச்சை நிறங்களும் மனதிற்கு அமைதியை கொடுத்தது. இதை மேலும் மேம்படுத்த வேண்டும் என நினைத்து இதற்காக செடி, மரங்களை கனிசமான எண்ணிக்கையில் நட திட்டமிட்டேன். ஆனால் அங்குள்ள மண்ணின் தன்மைகளில் மரங்கள் வளர உரம் தேவைப்படும் என தெரியவந்தது.

அப்போது விசாரித்தபோது அவர்கள் கழிவுகளை உரமாக பயன்படுத்தியதை தெரிந்து கொண்டேன். அப்போது கூவம் ஆற்றில் உள்ள கழிவுகளை பயன்படுத்த முடியாம என பல அறிவியல் ஆய்வாளர்களிடம் விசாரித்தபோது அவர்கள் பல சோதனைகள் செய்தபின் பயன்படுத்தலாம் என்றனர். 

இத்திட்டத்தை முதலில் நான் செயல்படுத்த விரும்பினேன். என்னைத் தொடர்ந்து சென்னையில் வாழும் மக்களும் இம்முறையை பின்பற்ற வேண்டும் என்பது எனது பணிவான வேண்டுகோள். 

இதனால் கூவத்தின் கழிகளும்சுத்தப்படுத்தப்படும் போது, இயற்கை அழகும் அதிகரிக்கும், மழைவளம் பெருகி தண்ணீர் பஞ்சமும் குறைய அதிகவாய்ப்புள்ளது என்று பார்த்திபன் பேசினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions