மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய பார்த்திபன்

Bookmark and Share

மழையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவிய பார்த்திபன்

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'சிம்ளி குஷ்பு' நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் பெற்ற பணத்தையும், தன்னுடைய சொந்த பணத்தையும் சேர்த்து நடிகர் பார்த்திபன் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார். 

கலகலப்பு, திறமை, புத்திசாலிதனம், தைரியம் மற்றும் அழகான குஷ்புவை கொண்ட ஒரு அரட்டை நிகழ்ச்சி தான் 'சிம்பிளி குஷ்பு'. பிரபல தமிழ் தொலைக்காட்சியான ஜி டிவியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் நடிகை குஷ்பு.

இந்த நிகழ்ச்சியில், குஷ்பு,  நட்சத்திரங்கள் இடையே கேள்விகளை கேட்க, ரசிகர்கள் அவர்களுக்கு பிடித்த பிரபலங்களின் சில ரகசியங்கள் , மறைக்கப்பட்ட திறமைகள், மறக்க முடியாத நடிப்பு ஒத்திகை சோதனைகள், நடன திறமைகள் போன்ற தனிப்பட்ட விஷயங்களை சுவாரஸ்யமாக தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களோடு மற்றொரு பிரபலமான குஷ்பு உரையாடுவதே, மேலும் பெருமை சேர்க்கும் விஷயமாகும். 

இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் அந்த நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பணத்தையும், தன் சொந்த பணத்தையும் கொண்டு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கியுள்ளார். இதுகுறித்து நடிகர் பார்த்திபன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.

"கன்னம் வச்சி களவாடுதல் போலே , 'simply kushbu ' show -க்கு போய் துண்டு விரித்து பெற்ற துட்டோடு சொந்தக் காசை அள்ளிப் போட்டு அரிசி வாங்கி , மழையில் நனைந்து காய்ந்தவர்களுக்கு வழங்கியதில் என் ஏரியா மக்களுக்கு மகிழ்ச்சி, எனக்கு மன நிறை குறை .... இன்னும் நிறைய முடியவில்லையே... என்று நடிகர் பார்த்திபன் பதிவு செய்துள்ளார்.


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions