பார்த்திபன் நடிக்க மறுத்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்!

Bookmark and Share

பார்த்திபன் நடிக்க மறுத்ததால் படப்பிடிப்பு நிறுத்தம்!

வித்தகன் படத்திற்கு பிறகு ஹீரோவாக நடிப்பதில் இருந்து மாறி விட்ட பார்த்திபன், ஜன்னல் ஓரம் படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்தார். அதையடுத்து கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படத்தை புதுமுகங்களை வைத்து இயக்கினார்.

அதோடு பல பிரபல நடிகர் நடிகைகள் கெஸ்ட் ரோலில் நடிக்க வைத்தார். அப்படம் அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்ததால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் தொடங்கப்போவதாக அறிவித்தார்.

அதோடு, அவரைத் தேடி மாஸ், நானும் ரெளடிதான், சூதாடி என சில மெகாப்பட வாய்ப்புகள் வந்ததால் அப்படங்களுக்கு கால்சீட் கொடுத்து நடிக்கத் தொடங்கினார். இதில் மாஸ் படத்தில் நடித்து முடித்து விட்ட பார்த்திபன், விஜயசேதுபதியின் நானும் ரெளடிதான் படத்திற்கு கால்சீட் கொடுத்தவர், குறித்த நாளில் படப்பிடிப்புக்கு செல்லவில்லையாம்.

அதனால் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாம். மேலும், இதன்காரணமாக நயன்தாரா அப்படத்துக்கு கொடுத்திருந்த கால்சீட் முடிந்து கொண்டிருக்கிறதாம். அதையடுத்து அவர் வேறு படங்களுக்கு கால்சீட் கொடுத்திருப்பதால் கால்சீட் ப்ராபளம் ஏற்படும் சூழல் உருவாகியிருக்கிறதாம்.

ஆனால், பார்த்திபன் எதற்காக அப்படத்தில் நடிக்க மறுக்கிறார்? என்று அப்பட யூனிட்டை விசாரித்தால் சரியான காரணத்தை சொல்ல தயங்குகிறார்கள். அதேசமயம், சில நாட்களில் பிரச்சினை முடிந்து படப்பிடிப்பு தொடங்கி விடும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

 


Post your comment





Related News
விஜய்யுடன் துணிந்து மோதும் இன்னொரு பிரபல நடிகர் – இந்தமுறையும் ஜெயிப்பாரா?
பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீசாவதற்கு பண்டிகை நாட்கள் தேவை இல்லை: பார்த்திபன்
ஒரு பாடலுக்கு ஆடுவதால் இமேஜ் குறையாது:மீனாட்சி
அண்ணா, என்னமா படம் எடுத்திருக்கீங்கண்ணா: பார்த்திபனை நேரில் பாராட்டினாரா விஜய்?
பாரதிராஜா படத்தில் நடிக்கும் பார்த்திபனின் கதாநாயகன்
பார்த்திபனை ஃபாலோ செய்யும் ராகவா லாரன்ஸ்
விரைவில் புதிய பாதை பார்ட் 2 இயக்குநர் பார்த்திபன் பேட்டி
ஜேம்ஸ்வசந்தனின் சோகத்துக்கு ஒத்தடம்கொடுத்த பார்த்திபன்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions