கூவத்திலிருந்து கழிவை உரமாக மாற்ற முயற்சிக்கும் பார்த்திபன்

Bookmark and Share

கூவத்திலிருந்து கழிவை உரமாக மாற்ற முயற்சிக்கும் பார்த்திபன்

தமிழ் சினிமா நடிகர்களில் சாதுரியமான பேசும், புதுமையை விரும்பும் புதுமை விரும்பியுமான பார்த்திபனின் அடுத்த அதிரடி, கூவம் கழிவை இயற்கை உரமாக பயன்படுத்துவது.

சென்னையை தாண்டி பல கிலோ மீட்டர்களுக்கு அப்பால் , இயற்கை காற்றுடனும், அமைதியான சூழலுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் பார்த்திபன், பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்களுக்கு நடுவில் ஒரு குடிசையில் சந்தோஷமாக இருக்கிறார்.

இங்கு இன்னும் ஏராளமான பூஞ்செடிகளையும், மரங்களையும் வளர்க்க பிரியப்படும் அவர், அதற்கு இயற்கை உரங்களை போடுகிற திட்டத்திலும் இருக்கிறார். அப்போது தோன்றிய யோசனைதான் கூவத்தில் வண்டலாக படிந்திருக்கும் இந்த கழிவுகளையே உரமாக்கினால் என்ன என்கிற யோசனை.

இதை ஒரு பொது மேடையில் அவர் பேச, அது சாத்தியம்தானா என்கிற விவாதங்கள் பல எழுந்தன. ஒரு ஆராய்ச்சியாளர், அது கூடவே கூடாது. கூவத்தில் படிந்திருப்பது விஷக்கழிவு. அதை உரமாக்கினால் விளைகிற பயிர்களும் விஷம்தான் என்றார்.

நான் பாபா அணு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து ஒரு விஞ்ஞானியை வரவழைத்து ஆராய்ந்தேன். கூவத்தின் பல்வேறு பகுதிகளை ஆராய்ந்த அவர், அடையார் பகுதிகளில் கிடைக்கிற கழிவுகளை பயன்படுத்தலாம் என்று நிரூபணம் செய்திருக்கிறார்.

அங்கிருந்து உரத்தை எடுப்பதற்கு மாநகராட்சியின் அனுமதி வேண்டும். முறைப்படி மாநாகராட்சி கமிஷனரிடம் அனுமதி கேட்டிருக்கிறேன். அவரும் ஆவண செய்வதாக கூறியிருக்கிறார் என்றார்.


Post your comment





Related News
இயக்குனர், வில்லனாக பாக்யராஜ் ரீ என்ட்ரி
நிவாரண பணிகளில் 50 நடிகர்-நடிகைகள்: வீடு, வீடாக உணவு, துணிமணிகள் வினியோகம்
தெருவில் பேண்ட்டை மடித்துவிட்டு இறங்கி வேலைபார்க்கும் பார்த்திபன்
நிஜத்திலும் ஹீரோக்களாகிய நடிகர்கள்
சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்திபனின் படம்!
பாரதிராஜா படத்தில் நடிக்கும் பார்த்திபன்.!
11 புதுமுகங்களுடன் களமிறங்கும் பார்த்திபன்!
இசையமைப்பாளரிடம் மாட்டி அவஸ்தைப் படும் பார்த்திபன்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions