தெருவில் பேண்ட்டை மடித்துவிட்டு இறங்கி வேலைபார்க்கும் பார்த்திபன்

Bookmark and Share

தெருவில் பேண்ட்டை மடித்துவிட்டு இறங்கி வேலைபார்க்கும் பார்த்திபன்

தனிநபர் முதல் திரைநட்சத்திரம் வரை எல்லோரும் தெருவில் இறங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகின்றனர்.

திரையுலகப் பிரபலங்கள் பலரும் களத்தில் இருக்கின்றனர்.நடிகர் பார்த்திபனும் மழை பாதித்த முதல்நாளிலிருந்து தன்னாலியன்ற உதவிகளை நேரடியாக மக்களுக்குச் செய்துவருகிறார்.

கடந்த சில நாட்களாகவே கேகேநகர், வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று உதவிகள் செய்துவருகிறார். நேற்று அவர் வளசரவாக்கம் வேம்புலிஅம்மன் கோலிவ் தெருவுக்குச் சென்ற அவர், முழங்காலளவு தண்ணீரில் நடந்துசென்று தெருவெங்கும் பிளீச்சிங்பவுடரைத் தூவினார். அதோடு ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் பாட்டில்களைக் கொடுத்தார். 

அந்தப்பகுதியில் பலரும் உணவுவிநியோகம் செய்திருக்கின்றனர். ஆனால் அம்மக்களின் அவசியத்தேவையான குடிநீருக்குப் பற்றாக்குறை இருந்திருக்கிறது. அதைத் தெரிந்துகொண்டே குடிநீர் பாட்டில்களை எடுத்துக்கொண்டுபோய்க் கொடுத்துவிட்டு வந்திருக்கிறார். 

சில இடங்களுக்குப் படகில் செல்லவேண்டியிருந்ததாம். அதற்கு அப்பகுதி காவல்ஆய்வாளர் உதவி செய்திருக்கிறார். தவித்த வாய்க்குத் தண்ணீர்கொடுத்த பார்த்திபனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனராம்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions