பருத்தி வீரன் போல் கொம்பனும் மிகப்பெரிய வெற்றி பெறும்: கார்த்தி பேட்டி

Bookmark and Share

பருத்தி வீரன் போல் கொம்பனும் மிகப்பெரிய வெற்றி பெறும்: கார்த்தி பேட்டி

நடிகர் சிவகுமாரின் உறவினர் இல்ல திருமண நிச்சயதார்த்தம் இன்று (புதன்கிழமை) கோபியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் நடிகர் சிவகுமார், மகன் கார்த்தி மற்றும் உறவினர்கள் பங்கேற்றனர். பின்னர் கார்த்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

நான் நடித்துள்ள கொம்பன் படம் வருகிற 2–ந்தேதி திரைக்கு வருகிறது. இதில் லட்சுமிமேனன், ராஜ்கிரன், கோவை சரளா போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படம் மாமனார்–மருமகனுக்கு இடையே நடைபெறும் சின்ன சின்ன குடும்ப பிரச்சினைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

மாமனாராக ராஜ்கிரனும், அம்மாவாக கோவை சரளாவும் நடித்துள்ளனர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பருத்திவீரன் படம் வெளியானது. அந்த படத்தை போன்று கொம்பன் படமும் மாபெரும் வெற்றி பெறும். ரசிகர்களுக்கு இது விருந்தாக அமையும். குடும்பத்துடன் சென்று படம் பார்க்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
கார்த்தியின் வெற்றி செண்டிமெண்ட், இந்த முறையும் எதிர்ப்பார்ப்பு அதிகம்
பருத்திவீரன் படத்தில் நடித்த கிராமிய பாடகர் மரணம்: அதிர்ச்சியில் மனைவியும் இறந்தார்
கொம்பனின் என் பாத்திரம் பருத்திவீரனுக்கு நேர் எதிராக இருக்கும்! - கார்த்தி
உங்க படம் எல்லாம் மொக்கை, நான் மெட்ராஸை பார்க்க மாட்டேன்: கார்த்தியிடம் கூறிய சிறுவன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions