காதலி கதாபாத்திரத்தில் நடித்து அலுத்து போய் விட்டது: பார்வதி பேட்டி

Bookmark and Share

காதலி கதாபாத்திரத்தில்  நடித்து அலுத்து போய் விட்டது: பார்வதி பேட்டி

‘பெங்களூர் நாட்கள்’ பட அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ஆர்யா, ராணா, பாபிசிம்ஹா, பார்வதி, ஸ்ரீதிவ்யா, டைரக்டர் பொம்மரிலு பாஸ்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் பார்வதி பேசும்போது, நடிகைகளின் நடிப்பை மட்டும் ரசிகர்கள் பார்க்க வேண்டும். அவர்களின் பாத்திரங்களை மட்டும் ரசிக்க வேண்டும். நடிகைகள் பொதுவான சொத்து அல்ல. அப்படியாரும் பார்க்க வேண்டாம்.

இதற்காகவே நான் படங்களில் மட்டும் நடிக்கிறேன். விளம்பர படங்களில் நடிப்பதில்லை. அது என் வேலையல்ல. திறப்பு விழாக்களுக்கும் செல்வது இல்லை.

வாழ்க்கைக்கு பணம் தேவை என்பதால் நான் நடிப்பதற்கு தேவையான சம்பளத்தை கேட்டு வாங்குகிறேன். விலை உயர்ந்த காரில் செல்லும் ஆசை இல்லை.
படங்களில் காதலி வேடங்களில் நடித்து அலுத்துப் போய் விட்டது. நல்ல பாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்பது ஆசை என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்யா, முன்னாள் காதலி கொடுத்த நினைவு பரிசு இருந்தால் அதை நாம் வீட்டில் வைப்போம். ஆனால் ராணாவுக்கு அது போன்ற பரிசுகளை வைக்க மியூசியம்தான் கட்ட வேண்டும் என்று கிண்டல் அடித்தார்.

ராணாவுக்கு திரிஷா என்ன உறவு என்ற கேள்விக்கு ‘இல்லாதவர்கள் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்று ராணா கூறினார். இதுபற்றி கூறிய ஆர்யா, ‘‘எனக்கு திரிஷா தங்கச்சி. ராணாவுக்கு என்ன முறை என்பதை ராணாதான் சொல்ல வேண்டும்’’ என்று சொல்லி கலகலப்பூட்டினார்.


Post your comment





Related News
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
போலீசிடம் புகார் அளித்த பார்வதி! என்ன நடந்தது?
சூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்
நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை
தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்
பாலியல் கொடுமையை நானும் சந்தித்துள்ளேன் – பார்வதி அதிர்ச்சி பேச்சு!
ஆபாசமாக வர்ணித்ததவரை கண்டித்த நடிகைகள் பூஜா, பார்வதி மேனன்!
வசந்த் இயக்கத்தில் பூ பார்வதி
பார்வதிமேனனை பாராட்டிய கமல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions