உத்தமவில்லன் உதாசீனம்... வருத்தப்பட்ட பார்வதி

Bookmark and Share

உத்தமவில்லன் உதாசீனம்... வருத்தப்பட்ட பார்வதி

பூ, மற்றும் மரியான் போன்ற படங்களில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் பார்வதி. சமகால நடிகைகளில் நடிகையர் திலகமாக விளங்கிக் கொண்டிருப்பவர் பார்வதி என்று திரைப்படத்துறையினரே வியப்பார்கள்.

பார்வதியைப் பற்றி கமலும் அறிந்து வைத்திருந்ததினால் தான் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் உத்தம வில்லன் படத்தை ஆரம்பித்தபோது பார்வதிக்கு முக்கிய வேடத்தைக் கொடுத்திருக்கிறார் கமல்.

இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக பூஜா குமார், ஆன்ட்ரியா ஆகியோர் நடித்துள்ளனர்.  என்றாலும், உத்தமவில்லன் படத்தில் பார்வதியின் கேரக்டர் பேசப்படும் அளவுக்கு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் உத்தமவில்லன் படத்தின் செய்தியிலும் பப்ளிசிட்டியிலும் பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருக்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பார்வதி ஏற்று நடித்துள்ள கேரக்டர் எப்படிப்பட்டது என்பது குறித்த எந்த தகவலும் இல்லை.

தன்னைப் பற்றிய செய்தி வெளியாகாமல் இருந்தது பார்வதியை வருத்தப்பட வைத்துவிட்டதாம். இது பற்றி கமலிடம் கேட்க தைரியமில்லாமல், இயக்குநரான ரமேஷ் அரவிந்துக்கு போன் பண்ணி வருத்தப்பட்டிருக்கிறார்.

அதன் பிறகே, உத்தமவில்லன் படத்தில் பார்வதி கமலுக்கு மகளாக நடித்துள்ள தகவலை வெளியே சொல்ல ஆரம்பித்துள்ளார் இயக்குனர் ரமேஷ் அரவிந்த். அது மட்டுமல்ல கமலுக்கு இணையான நடிப்பை பார்வதி வழங்கியுள்ளார் என்றும் பத்திரிகைப் பேட்டிகளில் கூறி வருகிறார் ரமேஷ் அரவிந்த்!


Post your comment





Related News
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
போலீசிடம் புகார் அளித்த பார்வதி! என்ன நடந்தது?
சூப்பர் ஹிட்டான படத்தில் பார்வதிக்கு நடந்த கொடுமை- அவரே சொல்கின்றார்
நான் எவ்வளவு வாங்கினால் உங்களுக்கு என்ன? கொந்தளித்த நடிகை
தமிழ் பெண்ணாக மாறிவிட்டேன்: பார்வதி நாயர்
பாலியல் கொடுமையை நானும் சந்தித்துள்ளேன் – பார்வதி அதிர்ச்சி பேச்சு!
காதலி கதாபாத்திரத்தில் நடித்து அலுத்து போய் விட்டது: பார்வதி பேட்டி
ஆபாசமாக வர்ணித்ததவரை கண்டித்த நடிகைகள் பூஜா, பார்வதி மேனன்!
வசந்த் இயக்கத்தில் பூ பார்வதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions