பார்வதிமேனனை பாராட்டிய கமல்!

Bookmark and Share

பார்வதிமேனனை பாராட்டிய கமல்!

தமிழில் பூ படத்தில் அறிமுகமான பார்வதி மேனன், அதையடுத்து, மரியான் படத்திலும் நாயகியாக நடித்தார். அதையடுத்து சென்னையில் ஒருநாள் உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்தவர், கமலின் உத்தமவில்லன் படத்தில் அவரது மகளாகவே நடித்திருந்தார்.

சில காட்சிகளில் மட்டுமே வந்து செல்லும் வேடம் என்றாலும், அழுத்தமான கதாபாத்திரம். கமலின் மகள் என்றபோதும், சிறுவயதில் இருந்தே ஜெயராமின் மகளாக வளர்ந்த பார்வதிமேனன், பின்னர் தனது தந்தையான கமலை சந்திக்கும்போது அவரிடம் பேசும் காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அந்த காட்சிகளில் நடித்து முடித்ததும் கமலே அவரை வெகுவாக பாராட்டினாராம். மேலும், அப்படத்தில் நடித்த ஜெயராம், பூஜாகுமார் ஆகியோரும் படத்தை முதல்நாள் பார்த்தவுடன் அவரை அழைத்து பாராட்டி உற்சாகப்படுத்தினார்களாம்.

அதனால் மிதமிஞ்சிய சந்தோசத்தில் இருக்கும் பார்வதி, முதலில் பூஜாகுமார், ஆண்ட்ரியா என்ற இரண்டு நடிகைகள் இருக்கும்போது நமக்கு என்ன பெரிதாக கேரக்டர் கிடைக்கப்பேகிறது என்றுதான் நடிக்கச்சென்றேன்.

ஆனால், அந்த கேரக்டர் பற்றி கமல் சார் சொன்னதும் அது என்னை ஈர்த்து விட்டது. வழக்கமாக இல்லாமல் வித்தியாசமான ரோல் என்பதால் அதிக ஈடுபாடு காட்டி நடித்தேன்.

அதனால் சிறிய வேடம் என்னை பெரிதாக பேச வைத்து விட்டது. அதற்காக கமல் சாருக்குத்தான் நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன் என்று சினிமா வட்டாரங்களில் கூறி வருகிறார் பார்வதிமேனன்.


Post your comment





Related News
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்
ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்
சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்
அமெரிக்காவில் நடைபெறும் இந்திய சுதந்திர தின விழாவில் கமல்ஹாசன், ஸ்ருதி பங்கேற்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
இந்த வார இறுதியில் பிக்பாஸ் வீட்டுக்கு வரும் முன்னணி நடிகை! உறுதியான தகவல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions