பார்வதி மேனனை புலம்பவிட்ட கோடம்பாக்கம்!

Bookmark and Share

பார்வதி மேனனை புலம்பவிட்ட கோடம்பாக்கம்!

சசி இயக்கிய பூ படத்தில் நடித்தவர் பார்வதி. மலையாள நடிகையான இவர் அந்த படத்தில் தனது உடம்பை கருப்பாக மாற்றிக்கொண்டு அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்திருந்தார்.

ஆனால் அப்படி சிறப்பாக நடித்த பார்வதிக்கு அதன்பிறகு தமிழில் படமே இல்லை. அதனால் மீண்டும் மலையாள படங்களில் நடித்து வந்தார். அதையடுத்து, 5 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழுக்கு வந்து பார்வதிமேனன் என்ற பெயரில் மரியான் படத்தில் நடித்தார் அவர். பூ படத்தை விட இன்னும் மெருகேறியிருந்த பார்வதிமேனன், மீனவ கிராமத்து பெண்ணாகவே மாறி தனுஷை உருகி உருகி காதலித்தபடி நடித்தார். அவரது நடிப்பு ஒவ்வொரு காட்சியிலுமே பேசப்படும்படியாக இருந்தது.

ஆனபோதும், அதன்பிறகும் வழக்கம்போல் பார்வதிக்கு புதிய தமிழ் படங்கள் புக்காகவில்லை. சென்னையில் ஒருநாள் படத்தில்கூட ஒரு கேரக்டரில் மட்டுமே நடித்தவர், இப்போது கமலின் உத்தமவில்லனிலும் ஜெயராமின் மகளாக ஒரு கேரக்டரில் நடித்திருக்கிறார். அந்த படத்தைப் பொறுத்தவரை பூஜாகுமார், ஆண்ட்ரியா ஆகியோருக்குத்தான் கதாநாயகி வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதன்பிறகும் அவரை கதாநாயகி வேடங்களுக்காக யாருமே அணுகவில்லை. ஆனால் மலையாள சினிமாவில் இதுவரை 10 படங்களுக்கு மேல் கதாநாயகியாக நடித்து விட்ட பார்வதிமேனன் இப்போதும் இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

அதனால், தமிழ் சினிமா தனக்கு சரியான அங்கீகாரத்தை கொடுக்கவில்லை என்று பீல் பண்ணும் பார்வதிமேனன், கிளாமராக நடிக்க மாட்டேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னை ஓரங்கட்டுவது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றும் தனது அபிமானத்திற்குரிய கோலிவுட் நண்பர்களிடம் கூறி வருகிறார் பார்வதிமேனன்.


Post your comment





Related News
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions