பரத்தின் கதாநாயகியாக பார்வதி நாயர்..!

Bookmark and Share

பரத்தின் கதாநாயகியாக பார்வதி நாயர்..!

வில்லனின் மனைவி நல்லவளாகத்தான் இருக்கவேண்டும் என்கிற சினிமா கிளிஷேக்களை உடைத்து 'என்னை அறிந்தால்' படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடிப்பில் ஆச்சர்ய முகம் காட்டியிருந்தார் பார்வதி நாயர்.

இதோ இப்போது உத்தம வில்லனில் மிகச்சிறிய வேடம் தான் என்றாலும், கமலின் மகனை காதலிக்கும் பெண்ணாக இரண்டு காட்சிகளில் வந்தாலும் தனது பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார்.

மலையாளத்தில் 2013ல் 'பாப்பின்ஸ்' படம் மூலம் அறிமுகமான அந்த வருடத்திலேயே ஏழு படங்களில் நடித்த இவருக்கு, சோதனையாக கடந்த வருடம் 'ஆங்ரி பேபீஸ்' என்கிற ஒரே ஒரு மலையாள படம் மட்டும் தான் வெளியானது.. ஆனாலும் இந்த வருடம் தமிழில் அஜித், கமல் படங்களில் நடித்துள்ளதால் அந்த இழப்பை எல்லாம் ஈடுகட்டியது போன்ற சந்தோஷத்தில் இருக்கிறார் பார்வதி நாயர்.

தற்போது மலையாளத்தில் அனில் ராதாகிருஷ்ணன் மேனன் இயக்கிவரும் 'லார்ட் லிவிங்ஸ்டோன் 7௦௦௦ கண்டி' என்கிற படத்தில் நடிக்கும் வாய்ப்பு பார்வதி நாயரை தேடி வந்துள்ளது.

இந்தப்படத்தில் குஞ்சாக்கோ போபனுடன், நம்ம பரத்தும் ஒரு ஹீரோவாக நடிக்கிறார்.. இதுதவிர 'வாஸ்கோடகாமா' என்கிற கன்னடப்படத்திலும் பார்வதி நாயர் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.

இவளால் இந்த கேரக்டரை பண்ணமுடியுமா என்கிற சந்தேகம் தன்மீது எப்போதும் யாருக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறாராம் பார்வதி நாயர்.


Post your comment





Related News
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - பகீர் கிளப்பும் தனுஷ் பட நடிகை.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions