ஜாதி பெயரை தவிர்க்கும் பூ பார்வதி!

Bookmark and Share

ஜாதி பெயரை தவிர்க்கும் பூ பார்வதி!

மலையாள சினிமாவில் இருந்து தமிழுக்கு வரும் சில நடிகைகள் தங்களது பெயருக்குப் பின்னால் தங்களது ஜாதியையும் இணைத்துள்ளனர். அதாவது, நாயர், மேனன் என்று இணைத்துக்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில், பூ படத்தில் நடித்த பார்வதியின் பெயரோடு அப்போது அவரது ஜாதி ஒட்டிக்கொள்ளவில்லை. ஆனால், தனுசுடன் மரியான் படத்தில் அவர் நடித்தபோது, அப்படத்தின் ஆடியோ விழாவில், அவரை பார்வதி மேனன் என்று மேடையில் குறிப்பிட்டனர்.  

ஆனால் அப்போது, நான் பார்வதி மேனன் அல்ல பார்வதிதான் என்று சத்தமாக குரல் கொடுத்தார் பார்வதி. ஆனபோதும், அதன்பிறகு அவர் பெயரோடு நாயரும் இணைந்து விட்டது.

இந்த நிலையில்,உத்தமவில்லன் படத்திலும் நடித்துள்ள அவரை அப்படத்தின் ஆடியோ விழாவில் மேடைக்கு அழைத்த பார்த்திபனும், பார்வதி நாயர் என்றுதான் சொன்னார்.

ஆனால், அப்போதும் நாயர் வேண்டாம். பார்வதி என்றே சொல்லுங்கள் என்றும் கேட்டுக்கொண்ட பார்வதி, அதைத் தொடர்நது மீடியா நண்பர்களிடமும் பார்வதி என்று மட்டுமே என்னை குறிப்பிடுங்கள் என்றும் கேட்டுக்கொண்டு வருகிறார் அவர்.


Post your comment





Related News
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
சதுரங்க வேட்டை நாயகிக்கு திருமணம் - துபாய் வாழ் இந்தியரை மணந்தார்
காரில் பாலியல் தொல்லை? - நடிகை பார்வதி நாயர் விளக்கம்
அஜித் கொடுத்த பரிசு, துள்ளி குதித்த பிரபல நடிகை - என்னனு நீங்களே பாருங்க.!
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - பகீர் கிளப்பும் தனுஷ் பட நடிகை.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
ஹிந்தியில் தேவசேனா இவரா? எதற்கு தெரியுமா
அதிமேதாவிகளுக்காக 10 நாட்களில் உடல் எடையை குறைத்த இஷாரா நாயர்
முதல் பட இயக்குனரே கணவரானது எப்படி?: நடிகை ஓபன் டாக்
துல்கர் சல்மான் ஹீரோயினுக்கு கல்யாணம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions