உடல் உறுப்புகளை தானம் செய்தார் பார்வதி ஓமனக்குட்டன்!

Bookmark and Share

உடல் உறுப்புகளை தானம் செய்தார் பார்வதி ஓமனக்குட்டன்!

அஜீத்தின், பில்லா-2 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பார்வதி ஓமனக்குட்டன். அதன்பிறகு தமிழில் அவருக்கு வாய்ப்புகள் இல்லாததால் தமிழ் சினிமாவை விட்டு பீல்டு-அவுட் நடிகையானார்.

சினிமாவில் வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், சமூக சேவைகளில் அவ்வப்போது தன்னை ஈடுபடுத்தி கொண்டு வருகிறார். சமீபகாலமாக, ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்.

இந்நிலையில், தனது உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளார் நடிகை பார்வதி ஓமனக்குட்டன். இதுகுறித்து பார்வதி ஓமனக்குட்டன் கூறியுள்ளதாவது, இறந்த பின்னர் மண்ணில் வீணாகப்போகும் உடல் உறுப்புகளை தானம் செய்வதன் மூலம் பலர் பயன் அடைவார்கள்.

நான் இப்படி ஒரு முடிவு எடுத்தது எனக்கு ஒரு வித புதிய அனுபவத்தை தந்தது. நான் உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன் என்று சொன்னதும், எனது பெற்றோர் மற்றும் சகோதரரும் எனக்கு ஆதரவு தந்தார்கள்.

எனக்கு எப்போதும் பக்கபலமாக இருப்பவர்கள் என் குடும்த்தார் தான். எனது பிறந்தநாளில் இப்படியொரு முடிவை எடுத்தேன். பொதுவாக எனக்கு பிறந்தநாளில் பார்டி எல்லாம் கொண்டாடுவது பிடிக்காது, இதுபோன்று விஷயங்கள் மற்றும் பிறருக்கு உதவுவது தான் எனக்கு பிடிக்கும் என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
கன்னியாஸ்திரி பாலியல் புகார்: எம்.எல்.ஏவை கண்டித்த நடிகை பார்வதி
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பட்டியலை வெளியிடுவேன் - பகீர் கிளப்பும் தனுஷ் பட நடிகை.!
ஜாதி பெயர்! நடிகை பார்வதி நாயரை டிவி நிகழ்ச்சியில் வெளுத்து வாங்கிய பிரபல இயக்குனர்
சீனியர் நடிகர் என்னை படுக்கைக்கு அழைத்தார்: மரியான் நடிகை பார்வதி
ஆபாச பட சர்ச்சையில் மாட்டிய பார்வதி நாயர்- மிகுந்த மன உளைச்சலில் கூறியதை இப்படியா செய்வது?
சுசிலீக்ஸ்: பதறிப்போய் விளக்கம் அளித்த நடிகை பார்வதி நாயர்
தாங்க முடியாமல் இறந்துபோன பிரபல நடிகையின் தந்தை! மரண அவலம்
பிரபல நடிகைக்கு மரண பயத்தை காட்டிய அஜித்
என் பெயருடன் ஜாதியை சேர்க்க வேண்டாம்: நடிகை பார்வதி மேனன் பேட்டி
அஜீத்தை பிரமாண்டமாக வரையும் பார்வதி நாயர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions