என் பெயருடன் ஜாதியை சேர்க்க வேண்டாம்: நடிகை பார்வதி மேனன் பேட்டி

Bookmark and Share

என் பெயருடன் ஜாதியை சேர்க்க வேண்டாம்: நடிகை பார்வதி மேனன் பேட்டி

தமிழில், 'சென்னையில் ஒருநாள்', 'உத்தமவில்லன்', 'மரியான்' படங்களில் நடித்தவர் பார்வதி. மலையாள முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். தனக்கு பிடித்த வேடங்களில் மட்டுமே நடிப்பது என்ற கொள்கையில் பார்வதி உறுதியாக இருக்கிறார்.

தற்போது பார்வதி என்ற பெயரில் மேலும் ஒரு நடிகை நடிக்க வந்திருக்கிறார். இருவரையும் அடையாளப்படுத்தி காட்டுவதற்காக இவரை பார்வதிமேனன் என்றும், புதிய நடிகையை பார்வதி நாயர் என்றும் குறிப்பிடுகிறார்கள். இதற்கு முதலில் நடிக்க வந்த பார்வதி எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். இதுகுறித்து கூறிய அவர்.... 

நான் எப்போதுமே ஜாதி அடையாளத்தை விரும்புவதில்லை. ஆனால் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. திடீரென்று எனது பெயருக்குப் பின்னால் மேனன் என்கிற ஜாதிபெயரை போடுகிறார்கள். அது எனக்கு வேண்டாம்.

தயவு செய்து என்னை பார்வதி மேனன் என்று அழைக்காதீர்கள். அப்படி அழைக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள். அதை செய்கிறேன். எனது நிஜமான பெயரிலேயே நான் அறியப்பட வேண்டும் என்று விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions