கேரளாவில் 5 மலையாள படங்களுடன் மோதும் பசங்க–2

Bookmark and Share

கேரளாவில் 5 மலையாள படங்களுடன் மோதும் பசங்க–2

பாண்டிராஜ் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரங்களுடன் சூர்யா, அமலாபால், பிந்துமாதவி நடித்துள்ள படம் ‘பசங்க–2’ நகர்புறத்தில் வாழும் குழந்தைகளின் வாழ்க்கை முறையை கலகலப்பாக சொல்லும் படமாக இது உருவாகி இருக்கிறது.

இந்த படம் 2 வாரங்களுக்கு முன்பு திரைக்கு வர இருந்தது. மழை காரணமாக அது தள்ளி வைக்கப்பட்டது. தற்போது வருகிற 24–ந்தேதி ‘ரிலீஸ்’ ஆகிறது. தெலுங்கு, மலையாளத்திலும் இந்த படம் வெளியாகிறது.

வருகிற 24–ந்தேதி மலையாளத்தில் திலீப் அவரது மனைவி மஞ்சுவாரியர் நடித்த படங்கள் மோத இருக்கின்றன. இதுதவிர துல்கர்சல்மான் படம் உள்பட மேலும் 3 மலையாள படங்களும் வர இருக்கின்றன. மலையாளத்தில் வரும் 5 படங்களுடன் சூர்யாவின் ‘பசங்க–2’ திரைப்படமும் திரைக்கு வருகிறது.

சூர்யாவுக்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அமலாபாலும் நடித்து இருக்கிறார். எனவே 5 மலையாள படங்களுடன் போட்டி போட்டாலும் ‘பசங்க–2’ வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
S3-யில் ஸ்ருதி ஹாசன்க்கு அம்மாவாக நடிக்கும் ராதிகா!
சூப்பர் டுப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்ற பசங்க 2!
பசங்க 2 படத்தை குழந்தைகள் பார்பதற்கு இலவசம்!
தன் பட இசையமைப்பாளருக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த சூர்யா!
பசங்க-2 வில் அமலாபாலின் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்க இருந்தாராம்!
‘பசங்க 2’ படத்தின் வெற்றி – இயக்குனர் பாண்டிராஜ் கார் பரிசளித்த சூர்யா!
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'
சூர்யா படத்துக்கு அப்பா சிவகுமார் எழுதிய விமர்சனம்!
தெலுங்கில் பசங்க2 வெளியாகாதது ஏன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions