பசங்க 2 படத்தைப் பற்றி சூர்யா அதிகம் பேசாதது ஏன்?

Bookmark and Share

பசங்க 2 படத்தைப் பற்றி சூர்யா அதிகம் பேசாதது ஏன்?

ஊரே வெள்ள பாதிப்பிலிருந்ததால் தனது பசங்க 2 படத்தைப் பற்றி மீடியாவில் எதுவும் பேசாமல் தவிர்த்துவிட்டதாக நடிகர் சூர்யா தெரிவித்தார்.

சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கியுள்ள படம் பசங்க 2. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் சூர்யா பங்கேற்றார்.

அவர் பேசுகையில், "சென்னையில் பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டு அதற்கான நிவாரண வேலைகளும் நடந்துகொண்டிருந்த நேரத்திலேயே பசங்க 2 படத்தின் வேலைகளும் நடந்தன.

நான் பசங்க 2 பற்றி அதிகம் பேசவில்லை என்று பலரும் சொன்னார்கள். அதற்குக் காரணம், ஊரே பாதிப்பில் இருக்கும்போது படத்தைப் பற்றி நாம் பேசுவது சரியாக இருக்குமா? இப்போது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிக்கிறோம் என்பதால் பட வெளியீட்டை உறுதி செய்திருக்கிறோம்.

படத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியபோது எது மாதிரிப் படங்களைத் தயாரிக்க வேண்டும் என்று நினைத்தோமோ அதுமாதிரியே இந்தப் படத்தின் கதை இருந்தது.

ஏற்கெனவே பசங்க என்கிற படத்தை எடுத்து தேசிய விருது வாங்கிய பாண்டிராஜ் இந்தப் படத்தை எங்களோடு இணைந்து உருவாக்க ஒப்புக்கொண்டதற்கு அவருக்கு நன்றி சொல்லவேண்டும்.

இந்தப் படம் குழந்தைகளுக்கான படம். குழந்தைகளைப் படத்துக்குக் கூட்டிப் போவதென்றால் அனிமேஷன் படங்கள் மட்டுமே இருக்கின்றன. பலவருடங்களுக்குப் பிறகு தங்க மீன்கள், காக்காமுட்டை போன்ற படங்கள் வந்தன. எனவேதான் இந்தப் படத்தைத் தயாரித்தோம்," என்றார்.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
S3-யில் ஸ்ருதி ஹாசன்க்கு அம்மாவாக நடிக்கும் ராதிகா!
சூப்பர் டுப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்ற பசங்க 2!
பசங்க 2 படத்தை குழந்தைகள் பார்பதற்கு இலவசம்!
தன் பட இசையமைப்பாளருக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த சூர்யா!
பசங்க-2 வில் அமலாபாலின் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்க இருந்தாராம்!
‘பசங்க 2’ படத்தின் வெற்றி – இயக்குனர் பாண்டிராஜ் கார் பரிசளித்த சூர்யா!
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'
சூர்யா படத்துக்கு அப்பா சிவகுமார் எழுதிய விமர்சனம்!
தெலுங்கில் பசங்க2 வெளியாகாதது ஏன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions