பசங்க 2 தெலுங்கில் ரிலீஸ் ஆகாதது ஏன்?

Bookmark and Share

பசங்க 2 தெலுங்கில் ரிலீஸ் ஆகாதது ஏன்?

சூர்யாவின் 2டி நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான பசங்க2 இன்று வெளியாகியிருக்கிறது. இந்தப்படத்தைத் தமிழில் வெளியிடும்போதே தெலுங்கிலும் வெளியிடத் திட்டமிட்டிருந்தார்களாம்.

படத்தின் கருத்து எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் என்பது மட்டுமின்றி தெலுங்குரசிகர்களுக்கும் பிடித்த சூர்யா மட்டுமின்றி அவர்களுக்குப் பரிச்சயமான அமலாபால், பிந்துமாதவி ஆகியோரும் நடித்திருப்பதால் படத்தைத் தெலுங்கில் வெளியிட முடிவுசெய்தனர். தெலுங்கில் மேமு என்று பெயரிட்டிருந்தனர். தெலுங்கில் சூர்யாவின் படங்களுக்கு பெரியஅளவில் வியாபாரம் இருக்கிறது. 

இந்தப்படத்தில் அவர் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருப்பதால் அதற்கேற்ப வியாபாரம் செய்து படத்தை வெளியிடத்திட்டமிட்டிருந்தனர். ஆனால் திட்டமிட்டபடி தெலுங்குப்பட வேலைகள் முடிவடையாததால் படத்தை வெளியிட முடியவில்லையாம். இதனால் ஓரிருவாரங்களுக்குப் பிறகு அங்கு படத்தை வெளியிட முடிவுசெய்திருக்கிறார்களாம்.

பசங்க 2 தள்ளிவைத்ததால் நன்மை விளைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். படத்துக்குத் தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் அங்கு இன்னும் கொஞ்சம் விலையை உயர்த்திவிடலாம் என்றும் சொல்கிறார்கள்.


Post your comment





Related News
முக்கிய இடம் பெற்ற கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம்! ரசிகர்கள் குஷி
S3-யில் ஸ்ருதி ஹாசன்க்கு அம்மாவாக நடிக்கும் ராதிகா!
சூப்பர் டுப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்ற பசங்க 2!
பசங்க 2 படத்தை குழந்தைகள் பார்பதற்கு இலவசம்!
தன் பட இசையமைப்பாளருக்கு தங்கச்சங்கிலியை பரிசளித்த சூர்யா!
பசங்க-2 வில் அமலாபாலின் கதாபாத்திரத்தில் முதலில் ஜோதிகா தான் நடிக்க இருந்தாராம்!
‘பசங்க 2’ படத்தின் வெற்றி – இயக்குனர் பாண்டிராஜ் கார் பரிசளித்த சூர்யா!
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் 'பூலோகம்’ படத்தின் வசூலை மிஞ்சியது 'பசங்க 2'
சூர்யா படத்துக்கு அப்பா சிவகுமார் எழுதிய விமர்சனம்!
தெலுங்கில் பசங்க2 வெளியாகாதது ஏன்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions