நடிகர் பசி நாராயணன் குடும்பத்திற்கு ஜெயலலிதா 10 லட்சம் நிதி உதவி!

Bookmark and Share

நடிகர் பசி நாராயணன் குடும்பத்திற்கு ஜெயலலிதா 10 லட்சம் நிதி உதவி!

எம்.ஜி.ஆர் நடித்த “அன்பே வா”, “ஆயிரத்தில் ஒருவன்” உள்ளிட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்த பிரபல திரைப்பட நடிகர் மறைந்த “பசி” நாராயணனின் குடும்பத்தினர், அவரது மறைவுக்குப் பிறகு எவ்வித வருமானமும் இன்றி வறுமையான சூழலில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்ற செய்தியை ஊடகங்கள் வழியாக நான் அறிந்தேன்.

“பசி” நாராயணன் குடும்பத்தினரின் வறுமையான சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து “பசி” நாராயணனின் மனைவி வள்ளிக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த 10 லட்சம் ரூபாய் “பசி” நாராயணனின் மனைவி வள்ளி பெயரில் “தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில்” வைப்பு நிதியாக வைக்கப்படும். இந்த வைப்பு நிதியில் இருந்து வட்டியாக மாதந்தோறும் 8,125 ரூபாய் வள்ளிக்கு கிடைக்கப் பெறும்.

இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!
ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் கூட்டணி மீண்டும் இணைவது உறுதியானது!
பைரவாவில் விஜய்யின் ஃபேவரிட் பாடல் என்ன தெரியுமா?
சந்தோஷ் நாராயணன் இசையில் விஜய்க்கு ஒரு நெருப்புடா பாடல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions