பசுபதி மீண்டும் நாயகனாக நடிக்கும் லவ் குரு!

Bookmark and Share

பசுபதி மீண்டும் நாயகனாக நடிக்கும் லவ் குரு!

பார்த்திபன் இயக்கிய ஹவுஸ்புல் படத்தில் அறிமுகமானவர் பசுபதி. அதையடுத்து ஆளவந்தான், கன்னத்தில் முத்தமிட்டால், தூள், அருள், விருமாண்டி, திருப்பாச்சி ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார்.

ஆனால் எல்லா வில்லன் நடிகர்களையும் போன்று அவரையும் வெயில் படத்தில் ஹீரோவானார். அதையடுத்து ரஜினி நடித்த குசேலன் படத்திலும் நாயகனாக நடித்த பசுபதிக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார்.

இருப்பினும், குசேலன் படத்தின் அதிர்ச்சி தோல்வி பசுபதியின் ஹீரோ மார்க்கெட்டுக்கு தடைக்கல்லாக அமைந்தது. அதனால் பின்னர் மீண்டும் வில்லன், கேரக்டர் ரோல் என்று நடிக்கத் தொடங்கிய பசுபதியின் மார்க்கெட் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நீ எங்கே என் அன்பே, இந்தியா பாகிஸ்தான் படங்களுக்குப்பிறகு மீண்டும் சூடுபிடித்துள்ளது.

தற்போது விக்ரம் நடித்து வரும் பத்து எண்றதுக்குள்ள படத்தில் முக்கிய வில்லனாக நடித்துள்ளார். இந்த நிலையில், மீண்டும் அவர் லவ் குரு என்றொரு படத்தில் நாயகனாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

இளைஞர்களுக்கு காதல் சொல்லிக்கொடுக்கும் குருவாக அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் பாடல் ரெக்கார்டிங் வேலைகள் தற்போது சென்னையிலுள்ள ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருகிறது.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
நான் பண்ண லவ் டார்ச்சர் தான் சாண்டி பிரிய காரணம் - காஜல் ஓபன் டாக்.!
சிவாஜிக்குப் பிறகு பசுபதிக்கு தான் கை தட்டினேன்- ஆர்.வி.உதயகுமார்!
நேரில் வந்து நாடக நடிகர்கள் வாக்களிக்க வேண்டும்: பசுபதி வேண்டுகோள்
நடிகர் பசுபதி ஜோடியாக நயந்தாரா நடிக்க மறுப்பு!
அரவானில் பசுபதியின் நடிப்பு பேசப்படும் : வசந்தபாலன்
நெல்லை அருகே மலையாள சினிமா சூட்டிங்கிற்கு எதிர்ப்பு – படக்குழுவினர் ஓட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions