நேரில் வந்து நாடக நடிகர்கள் வாக்களிக்க வேண்டும்: பசுபதி வேண்டுகோள்

Bookmark and Share

நேரில் வந்து நாடக நடிகர்கள் வாக்களிக்க வேண்டும்: பசுபதி வேண்டுகோள்

வருகிற 18–ந்தேதி நடிகர் சங்கத்தில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பாண்டவர் அணிக்காக ஆரணியை சேர்ந்த நாடக நடிகர்களிடம் ஆதரவு கேட்டு திரைப்பட நடிகர் பசுபதி நேற்று ஆரணி வந்திருந்தார். அப்போது அவர் கூறியதாவது:– 

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த நாடக நடிகர்களிடம் ஆதரவு கேட்டு வந்துள்ளேன். வருகிற 18–ந்தேதி அன்று நடைபெறும் சங்க தேர்தலில் பாண்டவர் அணி கண்டிப்பாக வெற்றி பெறும். நாடக நடிகர்கள் எப்போதும் தபால் ஓட்டுகளை மட்டுமே அனுப்பி வருகின்றனர். இந்த முறை நேரில் வந்து வாக்களிக்க வேண்டும் என்று நாடக நடிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன் என்றார்.

அப்போது தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என மாற்றுவீர்களா? என நிருபர்கள் கேட்ட போது முதலில் சென்னையில் தான் தென்னிந்திய நடிகர் சங்கம் தொடங்கப்பட்டது. 

அதன் பிறகு இச்சங்கத்திலிருந்து கேரள, ஆந்திர, கர்நாடக நடிகர் சங்கங்கள் பிரிந்து சென்றன. அதன்பிறகு இச்சங்கம் தென்னிந்திய நடிகர் என்ற பெயரிலேயே உள்ளது. சங்க பெயர் மாற்றப்படாது என்றார்.

பேட்டியின்போது, குன்னத்தூரை சேர்ந்த நடிகர் வாசுதேவன், ஆரணியை சேர்ந்த நாடக நடிகர்களான அண்ணாமலை, கோபால்சாமி, அக்ராபாளையம் சேகர், விநாயகபுரம் பொன்னையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
நான் பண்ண லவ் டார்ச்சர் தான் சாண்டி பிரிய காரணம் - காஜல் ஓபன் டாக்.!
சிவாஜிக்குப் பிறகு பசுபதிக்கு தான் கை தட்டினேன்- ஆர்.வி.உதயகுமார்!
பசுபதி மீண்டும் நாயகனாக நடிக்கும் லவ் குரு!
நடிகர் பசுபதி ஜோடியாக நயந்தாரா நடிக்க மறுப்பு!
அரவானில் பசுபதியின் நடிப்பு பேசப்படும் : வசந்தபாலன்
நெல்லை அருகே மலையாள சினிமா சூட்டிங்கிற்கு எதிர்ப்பு – படக்குழுவினர் ஓட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions