சிவாஜிக்குப் பிறகு பசுபதிக்கு தான் கை தட்டினேன்- ஆர்.வி.உதயகுமார்!

Bookmark and Share

சிவாஜிக்குப் பிறகு பசுபதிக்கு தான் கை தட்டினேன்- ஆர்.வி.உதயகுமார்!

விமல், நந்திதா நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் ‘அஞ்சல’. இதில் பசுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் இப்படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார்.

இப்படத்தை தங்கம் சரவணன் இயக்கியிருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலர் கலந்துக் கொண்டனர்.

இதில் ஆர்.வி.உதயகுமார் பேசும்போது, “அஞ்சல படத்தை திலிப் சுப்பராயன் தயாரித்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்திருக்கிறார். இப்படத்தில் நான் நந்திதாவுக்கு அப்பாவாக நடித்திருக்கிறேன்.

விமலும், நந்திதாவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார்கள். விமல் ஒரு யதார்த்தமான நடிகர். கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து கதாபாத்திரமாகவே வாழக்கூடியவர். பசுபதியின் நடிப்பை பார்த்து நான் வியந்து போனேன். நான் சிவாஜியின் நடிப்புக்குத்தான் கைத்தட்டியிருக்கிறேன்.

சிவாஜிக்குப் பிறகு பசுபதியின் நடிப்பை பார்த்து கைத்தட்டியிருக்கிறேன். அந்தளவிற்கு பசுபதி நடித்திருக்கிறார். படம் சிறப்பாக வந்திருக்கிறது. வெற்றிப்படமாக இப்படம் அமையும்’ என்றார்.


Post your comment





Related News
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
நான் பண்ண லவ் டார்ச்சர் தான் சாண்டி பிரிய காரணம் - காஜல் ஓபன் டாக்.!
நேரில் வந்து நாடக நடிகர்கள் வாக்களிக்க வேண்டும்: பசுபதி வேண்டுகோள்
பசுபதி மீண்டும் நாயகனாக நடிக்கும் லவ் குரு!
நடிகர் பசுபதி ஜோடியாக நயந்தாரா நடிக்க மறுப்பு!
அரவானில் பசுபதியின் நடிப்பு பேசப்படும் : வசந்தபாலன்
நெல்லை அருகே மலையாள சினிமா சூட்டிங்கிற்கு எதிர்ப்பு – படக்குழுவினர் ஓட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions