சீரியஸ் காமெடியன் பசுபதி!

Bookmark and Share

சீரியஸ் காமெடியன் பசுபதி!

விஜயசேதுபதி நடித்த இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் பஞ்சாயத்து செய்யும் அண்ணாச்சி வேடத்தில் நடித்திருந்தார் பசுபதி. அப்படத்தில் நந்திதாவை சிறு வயதில் இருந்தே காதலித்து வந்த விஜயசேதுபதி, அவர் தன்னை காதலிக்காத போதும் காதலித்தே ஆக வேண்டும் என்று துரத்துவார்.

அதனால் இந்த விசயம் பசுபதியுடம் பஞ்சாயத்துக்கு செல்லும். அப்போது அவர் அதை டீல் பண்ணுவதை காமெடியாக படமாக்கியிருந்தார் டைரக்டர் கோகுல்.

அதையடுத்து இப்போது விஜய் ஆண்டனி நடித்துள்ள இந்தியா பாகிஸ்தான் படத்தில் கிராமத்து அடியாளாக நடித்துள்ளாராம் பசுபதி. அதாவது, கதைப்படி வக்கீலாக நடித்துள்ள விஜய்ஆண்டனிக்கு வரும் கேஸ்களை, சாதுர்யமாக தன் பக்கம் இழுத்து விடுவாராம் இன்னொரு வக்கீலான நாயகி சுஷ்மாராஜ்.

இந்த விசயம் விஜய் ஆண்டனிக்கு தெரியவர, அவர்களுக்கிடையே பிரச்சினை ஏற்படுமாம். அதனால் ஒருவரை மாற்றி ஒருவர் ஆள் வைத்து அடிக்கும் அளவுக்கு மாறி விடுவார்களாம்.

அப்போது சுஷ்மாவின் அடியாளாக வரும் பசுபதி, விஜய் ஆண்டனியின் அடியாட்களுடன் வெட்டு குத்து என்று இறங்குவாராம். இந்த காட்சி சீரியசாக இருந்தாலும், படம் பார்ப்பவர்களுக்கு காமெடியாக இருக்கும் வகையில் படமாக்கப்பட்டிருக்கிறதாம். ஆக, இப்படத்தில் சீரியல் காமெடியனாகியிருக்கிறார் பசுபதி. 


Post your comment





Related News
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
விக்ரம் கூட்டணியில் மீண்டும் பசுபதி!
சான்ஸ் வரவில்லை அதனால் நடிக்கவில்லை! - பசுபதி
கோவையில் சேஸிங் காட்சி - விக்ரம், பசுபதி நடிக்கிறார்கள்
நயன்தாராவின் தந்தையாக நடிக்கும் பசுபதி
சொன்ன மாதிரி எடுக்க மாட்டீங்க இயக்குனரிடம் நடிகர் பாய்ச்சல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions