
ரஜினியின் நண்பனாக குசேலன் படத்தில் நடித்தபோது அடுத்து தமிழில் பெரிய ஹீரோவாகி விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் பசுபதி. ஆனால் அதையடுத்து அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து சினிமாவில் காணாமல் போனவர் பட்டியலில் இடம்பிடித்தார் அவர்.
இருப்பினும், நயன்தாரா நடித்த நீ எங்கே என் அன்பே, விஜயசேதுபதியின் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்கள் பசுபதிக்கு மீண்டும் புதிய படங்கள் கிடைக்க வழிவகுத்தன.
அதனால் தற்போது அஞ்சலா, அம்மாவின் மீசை, இந்தியா பாகிஸ்தான், சூதாடி, பத்து எண்றதுக்குள்ள, யாகவராயினும் நா காக்க என பல படங்களில் நடித்து வருகிறார். அவரிடத்தில், நீங்கள் தேடி வரும் பட வாய்ப்புகளை திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறதே? என்று கேட்டால், சில வருடங்களுக்கு முன்பு எனக்கு சரியான படங்கள் இல்லை.
அதனால், படங்களில் நடிக்கவில்லை. மேலும், சில படங்களின் கதை எனக்கு பிடிக்காமல் நான் திருப்பியும் அனுப்பியிருக்கிறேன். காரணம், பிடிக்காத கதையில் என்னால் ஈடுபாட்டுடன் நடிக்க முடியாது.
ஆனால், இப்போது பல படங்கள் உள்ளன. மேலும், முடிந்தவரை எனது வயதுக்கு மீறிய முதிர்ச்சியான வேடங்களை நான் தவிர்க்கிறேன் என்கிறார் பசுபதி.
Post your comment