பட்ற வன்முறை படம் இல்லை: இயக்குனர் விளக்கம்

Bookmark and Share

பட்ற வன்முறை படம் இல்லை: இயக்குனர் விளக்கம்

கே.பாக்யராஜ், பாண்டியராஜன் ஆகியோரிடம் உதவியாளராக இருந்த ஜெயந்தன் இயக்கி உள்ள படம் பட்ற. மிதுன் தேவ், வைதேகி, சாம்பால், புலிபாண்டி, ஆதேஷ் நடிக்கிறார்கள்.

ஸ்ரீ கிருஷ்ணா இசை அமைக்கிறார், சுனோஜ் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். பட்ற நான்கு இளைஞர்களின் வன்முறை கதை போன்ற தோற்றத்தை அதன் புரமோஷன்கள் ஏற்படுத்துகிறது.

அதை மறுத்து இயக்குனர் ஜெயந்தன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:

"பட்டறை என்றால் ஆயுதங்கள் செய்கிற இடம். அதன் கலோக்கியல் வார்த்தையே பட்ற. படத்தின் தலைப்பு மற்றும் டிசைன்களை பார்த்துவிட்டு இதனை வன்முறை படம் என்று சில விநியோகஸ்தர்களே சந்தேகப்பட்டார்கள். ஆனால் இது வன்முறை படம் அல்ல.

ஒரு குடும்பத்துக்கு ஒரு சின்ன பிரச்சினை வருகிறது. அதிலிருந்து தப்பிக்க அந்த குடும்பம் எடுக்கும் ஒரு தவறான முடிவு எந்த நிலைக்கு அவர்களை கொண்டு போகிறது என்பதுதான் கதை. ஒரே பிரச்னையில் வெவ்வேறு கதாபாத்திரங்கள் மாட்டிக் கொள்வது திரைக்கதை. அது என்ன பிரச்னை என்பதை சொன்னால் கதையின் பெப் போய்விடும்" என்கிறார் இயக்குனர் ஜெயந்தன்.


Post your comment





Related News
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
புதுமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கியுள்ள ‘பட்ற’
வாராவாரம் இத்தனைப் படங்களா...?
‘பட்ற’ படத்தில் குருட்டு தனமான தைரியத்தில் மெட்டு போட்டேன் : இசையமைப்பாளர் ஸ்ரீகிருஷ்ணா
பின் மண்டையில் அடி வாங்க பயந்தேன் ‘பட்ற’ கதாநாயகன் மிதுன்
கடற்கரையைக் காணாத சாலக்குடி சாரல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions