‘பட்ற’ படத்தில் குருட்டு தனமான தைரியத்தில் மெட்டு போட்டேன் : இசையமைப்பாளர் ஸ்ரீகிருஷ்ணா

Bookmark and Share

‘பட்ற’ படத்தில் குருட்டு தனமான தைரியத்தில் மெட்டு போட்டேன்  : இசையமைப்பாளர் ஸ்ரீகிருஷ்ணா

மிதுன், வைதேகி, சாம் பால், புலிபாண்டி என புதுமுகங்களுடன், அறிமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கத்தில் GK  சினிமாஸ் தயாரிக்கும் ‘பட்ற’ திரைப்படம் மார்ச் 20ஆம் தேதி வெளிவர தயாராக இருக்கிறது. கடம் வித்துவான் விக்கு விநாயக்ராம் குடும்பத்தை சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணா இப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
 
“ எங்களது குடும்பம் கர்னாடக சங்கீதத்தை அடிப்படையாய்க் கொண்ட குடும்பம்  சிறு வயது முதலே சினிமா இசையமைப்பாளர் என்றால் ஆர்வம் இருந்ததால் மேற்கத்திய இசை, பாரம்பரிய இசை மற்றும் தாள இசை பயிற்சி என அனைத்தையும் மேற்கொண்டேன். குறும் படங்கள், நாடகங்கள், மற்றும் விளம்பரங்கள் என  இசையமைத்து வந்தேன். இயக்குனர் ஜெயந்தன் எனக்கு இந்த Action  படத்திற்கு வாய்ப்பளித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.” தொடங்கினார் கிருஷ்ணா.
 
“ யுகபாரதி எழுதிய ‘அன்னக்கிளி’ பாடலுக்கு  இசையமைத்து மறக்க முடியாத நிகழ்வு. எப்பொழுதுமே எனது மெட்டுக்குத்தான் கவிஞர்கள் பாட்டெழுதுவார்கள். யுகபாரதி என்னை பாட்டுக்கு மெட்டமைக்க முடியுமா என்று சவால் விடுத்தார். ‘அன்னக்கிளி’ பாட்டை ஒவ்வொரு வரிக்கும் முதல் வார்த்தை படங்களின் பெயரை வைத்து எழுதினார். அனைவருக்கும் பிடித்துபோய் என்னை உடனே இசையமைக்க சொன்னார்கள். குருட்டு தனமான தைரியத்தில் போட்ட மெட்டுதான்  ‘அன்னக்கிளி’ பாட்டு. முழு பாடல்  5 நிமிடத்தில் முடிவடைந்தது. எனக்கு இது முற்றிலும் புது அனுபவமாய் இருந்தது. பின்னணி இசை நன்றாக வந்துள்ளது “ என்று கூறினார் அறிமுக இசையமைப்பாளர் ஸ்ரீ கிருஷ்ணா. 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions