புதுமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கியுள்ள ‘பட்ற’

Bookmark and Share

புதுமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கியுள்ள ‘பட்ற’

புதுமுக இயக்குனர் ஜெயந்தன் இயக்கியுள்ள ‘பட்ற’ திரைப்படம் வருகிற மார்ச் 20 ஆம் தேதி வெளியாக உள்ளது.எதற்கும் துணிந்த இளைஞர்களை தவறான பாதையில் இட்டு ஆக்கத்திற்கு மாறாக  அழிவிற்கு பயன்படுத்தும் சமுதாய இன்னல்களைப் பற்றி  கூற வருகிறது இப்படம். GK சினிமாஸ் தயாரிக்கும் இப்படத்தில் மிதுன், சாம்பால், புலிபாண்டி  மற்றும் வைதேகி என புதுமுகங்கள் நடித்துள்ளனர்.

“எனது முதல் படமான ‘பட்ற’ யதார்த்தத்தை மீறாமலும் புதிதாகவும் இருக்க வேண்டும் என உறுதியாக எண்ணினேன். இக்கதைக்கு புதுமுகங்கள் இருந்தால் நான் கதைக்கு எதிர்பார்த்த புத்துணர்வு கிடைக்கும் என்றும் எண்ணினேன். அந்த தேடலில் கிடைத்தவர்கள்தான் எனது கதாநாயகன் மிதுன் , வில்லன் நடிகர் சாம் பால் மற்றும் கதாநாயகி வைதேகி. கதைக்கு இவர்களது தோற்றமும் நடிப்பும் மிக உதவியாய் இருந்தது. இதுவரை படம் பார்த்தவர்களும் இதையேக் கூறினார்கள்” என்று மகிழ்ந்தார் ஜெயந்தன்.

“ஒரு அரசியல்வாதியின் கைகூலிகளாக இருக்கும் இரண்டு வில்லன்களைக் காட்ட வேண்டும் என்ற போது புலிபாண்டி மற்றும் சாம்பால் எனக்கு கச்சிதமாய் பொருந்தினார்கள். அதிலும் இளைஞர்களை கவர்ந்திழுக்கக் கூடிய ஒரு வசீகரிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் சாம் பால் தன்னை நிலை நிறுத்தியுள்ளார்.”

“இசையமைப்பாளர் ஸ்ரீ கிருஷ்ணா தன் இசையாலும் , ஒளிப்பதிவாளர் சுனோஜ் வேலாயுதன் தன நேர்த்திமிகு ஒளிப்பதிவாலும் இந்த பரபரப்பான திரைக்கதையை விறுவிறுப்புடன் நகர்த்த உதவியுள்ளார்கள். இந்த ஆக்ஷன் கதைக்கு ‘மிரட்டல்’ செல்வா தனது வைக்கும் சண்டை அசைவுகளால் சண்டைகாட்சிகளில் மிரட்டியுள்ளார். மார்ச் 20 ஆம் தேதி வெளி வர இருக்கும் 'பட்டர' நிச்சயம் கவரும். படம் பார்த்து எங்களை வாழ்த்திய அனைவரிஉக்கும் நன்றி' என நெகிழ்வுடன் கூறினார் புதுமுக இயக்குனர் ஜெயந்தன்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions