வாராவாரம் இத்தனைப் படங்களா...?

Bookmark and Share

வாராவாரம் இத்தனைப் படங்களா...?

மார்ச் மாதம் பரீட்சை நேரம், உலகக் கோப்பை கிரிக்கெட் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரம், அதனால் அதிகப் படங்கள் வெளிவராது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு மாறாக இந்த மாதத்தில்தான் வாராவாரம் அதிகப் படங்கள் வந்து கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களில் 16 படங்கள் வெளிவந்திருக்கின்றன. மார்ச் 6ம் தேதி 7 படங்களும், மார்ச் 13ம் தேதி 9 படங்களும் வெளியாகின. வரும் 20ம் தேதி வெள்ளியன்று “பட்ற, கடவுள் பாதி மிருகம் பாதி, கால கட்டம், வெத்து வேட்டு, இரவும் பகலும் வரும், ஆயா வடை சுட்ட கதை, கள்ளப்படம், அகத்திணை, மூச், திலகர்” ஆகிய 10 படங்கள் வெளிவருவதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

ஒரே நாளில் இவ்வளவு படங்கள் வெளிவருவது ஆச்சரியமான ஒன்றுதான். ஏப்ரல், மே மாதங்களில் பல பெரிய படங்கள் வெளி வர இருப்பதால் கிடைத்த 'கேப்'பில் இப்படி பல படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஒரு பக்கம் இவ்வளவு படங்கள் வெளிவந்தாலும் அவற்றில் எத்தனைப் படங்கள் பார்க்கும்படியாக இருக்கிறது என்றொரு கேள்வியும் மறுபக்கம் எழுந்துள்ளது. இதில் பல படங்கள் வருவதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை என்ற ரீதியில்தான் உள்ளன.

இன்னும் அடுத்த வாரம் 27ம் தேதியும் பல படங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படியே போனால் இந்த வருடம் தமிழில் 300 படங்கள் வெளிவந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை. 


Post your comment





Related News
அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி
விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்
ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்
சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
சிம்பு, விக்ரம் பட இயக்குனருடன் இணைந்த விஜய் சேதுபதி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions