பட்டாஸ் இயக்குநரின் அடுத்தப்படம்

Bookmark and Share

பட்டாஸ் இயக்குநரின் அடுத்தப்படம்

டோலிவுட்டில் இயக்குநர் அணில் ரவிபுதி இயக்கத்தில் இந்த வருட துவக்கத்தில் திரைக்கு  வந்த பட்டாஸ் படம் ரசிகர்களின் வரவேற்புடன் 100 நாட்களைக் கடந்து வசூல் சாதனை செய்தது.  

நடிகர் கல்யாண் ராம் மற்றும் ஸ்ருதி சோதி நடிப்பில் வெளிவந்த இப்படம் கன்னடம் மற்றும் தமிழிலும் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்நிலையில் பட்டாஸ் எனும் முதல் படத்திலேயே  தனது முத்திரையைப் பதித்த இயக்குநர் அணில் ரவிபுதியின் அடுத்த படத்தை டோலிவுட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்கின்றனர்.

அண்மையில் தனது இரண்டாவது படத்திற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்த அணில் ரவிபுதி தற்போது அப்பணிகளை நிறைவு செய்துள்ளார்.

இவரது படத்தில் முன்னணி நடிகர் நாயகனாக நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகின்றது.  இப்படம் குறித்த அறிவிப்பு ஜூன்  மாதத்தில் வெளியாகும் என தெரிகிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions