பாயும் புலியை சொந்தமாக ரிலீஸ் செய்யும் வேந்தர் மூவீஸ்

Bookmark and Share

பாயும் புலியை சொந்தமாக ரிலீஸ் செய்யும்  வேந்தர் மூவீஸ்

விஷால் கடைசியாக நடித்த ஆம்பள படம் சரியாகப்போகவில்லை. எனவே சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது நடித்து வரும் பாயும்புலி படத்தை கமர்ஷில் ஹிட் படமாக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் விஷால்.

அவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கும் பாயும் புலி படப்பிடிப்பு இன்றோடு நிறைவடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிவடைந்ததைத் டப்பிங்குக்கு நேரம் ஒதுக்கியதுபோக மற்ற நேரங்களில் நடிகர் சங்க தேர்தல் சம்மந்தமாக பிஸியாக இருக்கிறார் விஷால்.

இயக்குசர் சுசீந்திரன் பாயும்புலி படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை தொடங்கிவிட்டார். குறுகிய நாட்களில் படத்தை முடித்துவிட்டு வருகிற செப்டம்பர் 3-ஆம் தேதி அன்று பாயும்புலியை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். வேந்தர் மூவீஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாண்டிய நாடு படத்திற்கு பிறகு விஷாலும், சுசீந்திரனும் இணையும் படம் என்பதால் ரசிகர்களிடையே  பாயும் புலி படம் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. லிங்கா படம் தொடர்பாக பல ஏரியாக்களில் விநியோகஸ்தர்கள் உடன் பிரச்சனை இருப்பதால் பாயும்புலி படத்தை வேந்தர் மூவீஸ் நிறுவனமே நேரடியாக வெளியிடுகிறதாம்.


Post your comment





Related News
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !
அன்பு போல ஒரு ஆளை பார்க்க முடியாது - கலைப்புலி எஸ்.தாணு ஓபன் டாக்.!
முன்னணி நடிகர்களுக்கு மிக பெரிய தோல்வியை கொடுத்த படங்களின் லிஸ்ட் இதோ.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions