'பாவாட' யை டீலில் விட்ட பிருத்விராஜ்..!

Bookmark and Share

'பாவாட' யை டீலில் விட்ட பிருத்விராஜ்..!

கடந்த மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் '1983'  கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து பரபரப்பாக இதற்கு திரைக்கதை அமைத்தவர் பிபின் சந்திரன்.

இவர் அடுத்ததாக மார்த்தாண்டன் என்பவர் இயக்கும் புதிய படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார். படத்தின் பெயர் 'பாவாட'.. சிரிக்காதீர்கள்.. உண்மையில் படத்தின் பெயரே அதுதான்... இதில் ஹீரோவாக நடிப்பது யார் தெரியுமா..? நம்ம பிருத்விராஜ் தான். அவருடன் பிஜுமேனனும் கூடவே அனூப் மேனனும் சேர்ந்துகொண்டால் கலாட்டாவுக்கு கேட்கவா வேண்டும்.  

குடிக்கு அடிமையான இரண்டு பேர்களை பற்றிய இந்தக் கதையில் முக்கியமான கதாபாத்திரத்தில் ஷோபனா நடிக்கிறார். இதற்குமுன் வெளியான 'மெமோரீஸ்' படத்திலும் பிருத்விராஜ் எந்நேரமும் குடித்துக்கொண்டு இருக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காமெடி மற்றும் குணச்சித்திர நடிகராக வலம்வரும் மணியம்பிள்ளை ராஜு தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, போன ஏப்ரல் மாதமே துவங்கப்பட்ட இந்தப்படம் இன்னும் இழு, இழு என இழுத்துக்கொண்டு போவது மர்மமாகவே உள்ளது.

அதற்குப்பின் ஒப்புக்கொண்ட படங்களில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார் பிருத்விராஜ். எப்படியோ இந்த வருடத்திற்குள் 'பாவாட' எப்படியும் தயாராகிவிடும் என நம்புவோம். 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions